Published:Updated:

பழிக்குப் பழி... இருவர் வெட்டிக் கொலை - காவல் நிலையம் அருகே நடந்த பயங்கரம்!

கொலை

மணிமங்கலம் காவல் நிலையம் அருகே இரண்டு இளைஞர்கள் வெட்டிக் கொலைசெய்யப்பட்டனர்.

பழிக்குப் பழி... இருவர் வெட்டிக் கொலை - காவல் நிலையம் அருகே நடந்த பயங்கரம்!

மணிமங்கலம் காவல் நிலையம் அருகே இரண்டு இளைஞர்கள் வெட்டிக் கொலைசெய்யப்பட்டனர்.

Published:Updated:
கொலை

சென்னை தாம்பரத்தையடுத்த மணிமங்கலம், பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரை கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி ஐந்து பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலைசெய்தது. இந்த வழக்கில் சுகன் என்ற சுரேந்திரன், விக்கி என்கிற விக்னேஷ், சதீஷ், சுதாகர், அன்சாரி ஆகியோரை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு ஐந்து பேரும் ஜாமீனில் வெளியில் வந்தனர். பின்னர் அவர்கள் நாங்கள்தான் ரௌடி என கெத்துக் காட்டி வந்ததாகக் கூறப்படுகிறது.

விக்னேஷ்
விக்னேஷ்

இந்த நிலையில் 23.8.2022-ம் தேதி இரவு சுரேந்தர், விக்னேஷ் ஆகியோர் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது இருவரையும் வழிமறித்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி, அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டியது. இந்தச் சம்பவம் மணிமங்கலம் காவல் நிலையம் அருகிலேயே நடந்தது. அதனால் போலீஸார் சம்பவம் நடந்த பகுதிக்கு வந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இதையடுத்து காயமடைந்த இருவரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து மணிமங்கலம் போலீஸார் கொலை வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். இந்தச் சூழலில் தப்பி ஓடியவர்கள் மணிமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்கள் மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (20), புஷ்பராஜ் (22), லோகேஸ்வரன் (24), டில்லிபாபு (20) எனத் தெரியவந்தது. இவர்கள் நான்கு பேரும் தேவேந்திரனின் நண்பர்கள். அதனால் நண்பனின் கொலைக்குப் பழிவாங்கவே சுரேந்தர், விக்னேஷ் இருவரையும் கொலை செய்ததது தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

சுரேந்தர்
சுரேந்தர்

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``தேவேந்திரன் என்பவர் கொலைக்கு பழிக்குப் பழிவாங்க அந்த வழக்கில் கைதான சுரேந்தர், விக்னேஷ் ஆகியோரை சபதம் போட்டு கொலை செய்திருக்கின்றனர். கைதானவர்களிடம் விசாரித்தபோது `ரத்தத்துக்கு ரத்தம், பழிக்குப் பழி வாங்கவே இவ்வளவு நாள் காத்திருந்தோம்!' என்று தெரிவித்திருக்கின்றனர். இதையடுத்து நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கிறோம்" என்றனர்.

காவல் நிலையம் அருகில் இரண்டு இளைஞர்கள் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.