Published:Updated:

சென்னை: 2 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை! - போக்சோவில் கைதான இளைஞர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிறுமிக்குப் பாலியல் தொல்லை
சிறுமிக்குப் பாலியல் தொல்லை

சென்னையில் சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இரண்டு இளைஞர்களை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் குடியிருக்கும் 16 வயது சிறுமியைக் காணவில்லை என அவரின் பெற்றோர் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் விசாரித்தபோது சிறுமியை இளைஞர் ஒருவர் அழைத்துச் சென்ற தகவல் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர் .விசாரணையில் சிறுமியை அழைத்துச் சென்றது நரேந்திரன் (21) எனத் தெரியவந்தது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

சிறுமியிடம் விசாரித்தபோது நரேந்திரன், தன்னைக் காதலிப்பதாகக் கூறினார். பிறகு திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைக் கூறி அழைத்துச் சென்றார். பின்னர் அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்தார். சிறுமி அளித்த தகவலின்படி சென்னை சூளையைச் சேர்ந்த நரேந்திரனை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்தனர்.

காதலிப்பதாக கூறி 5 திருமணம்! - போக்சோ வழக்கில் `கல்யாண மன்னனை' சிறையில் அடைத்த போலீஸ்

சம்பவம் 2:

சென்னை பூந்தமல்லி காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவரை சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிறுமியைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாகக் கூறினர். அதைக் கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அது குறித்து விசாரித்தபோது சிறுமி குடியிருக்கும் பகுதியைச் சேர்ந்த சூர்யா (23) என்பவர், காதலிப்பதாகக் கூறி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சூர்யாவை போலீஸார் கைதுசெய்தனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
Representational Image

இது குறித்து போலீஸார் கூறுகையில் ``இந்த வழக்கில் கைதான சூர்யா, ஆட்டோ டிரைவராக இருக்கிறார். சிறுமி பள்ளிக்குச் செல்லும்போதுதான் சூர்யாவுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சிறுமியை கர்ப்பமாக்கிய சூர்யா, வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது" என்றனர்.

போக்சோ வழக்கு: விடுவிக்கப்பட்ட குற்றவாளி; 7 ஆண்டுக்குப் பின் தண்டனை அளித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு