Published:Updated:

`தேனிக்கு அழைத்துவரப்பட்ட உதித்சூர்யா!’ -`நீட் ஆள்மாறாட்டம்’ வழக்கில் வேகம் காட்டும் சி.பி.சி.ஐ.டி

அதிகாலை 2 மணியளவில் தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டனர்.

udith surya
udith surya

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த உதித்சூர்யா, நேற்று குடும்பத்தோடு திருப்பதி மலையடிவாரத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர்கள், இன்று அதிகாலை 2 மணியளவில் தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டனர்.

Theni CBCID Office
Theni CBCID Office
இன்று, சி.பி.சி.ஐ.டி எஸ்.பி விஜயகுமார் தேனி வர இருக்கிறார். தொடர்ந்து உதித்சூர்யா மற்றும் அவரின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட இருக்கிறது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட வழக்கில் தேனி மாவட்ட காவல்துறை தனிப்படை அமைக்கப்பட்டு, உதித்சூர்யாவை கைதுசெய்ய சென்னை புறப்பட்டுச் சென்றது. அங்கே, குடும்பத்தோடு உதித்சூர்யா தலைமறைவானார். குடும்பத்தினர், உறவினர்களின் செல்போன் எண்களின் சிக்னல்களை வைத்து உதித்சூர்யாவின் குடும்பத்தைத் தேடிவந்தது தனிப்படை. இதற்கிடையில் வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது.

`தேனிக்கு அழைத்துவரப்பட்ட உதித்சூர்யா!’ -`நீட் ஆள்மாறாட்டம்’ வழக்கில் வேகம் காட்டும் சி.பி.சி.ஐ.டி

கிட்டத்தட்ட உதித்சூர்யாவை நெருங்கியிருந்த தனிப்படைக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும், காவல்துறை அதிகாரிகளுக்கு அப்போதைய நிலையை எடுத்துச் சொல்லி, உதித்சூர்யாவைப் பின்தொடர்ந்து சென்றது தனிப்படை. இந்த நிலையில் நேற்று காலை, திருப்பதி மலையடிவாரத்தில் வைத்து குடும்பத்தோடு உதித்சூர்யா கைது செய்யப்பட்டார். அவர்கள், சென்னை சி.பி.சி.ஐ.டி தலைமையகத்துக்கு அழைத்துவரப்பட்டு அங்கே ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், அவர்களைத் தேனி அழைத்துவந்தது சி.பி.சி.ஐ.டி.

இதற்கிடையில், சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி ஹாட்வின் ஜெகதீஸ்குமார், தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு நேற்று மாலை 7 மணிக்கு வந்தார். தேனி சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் சித்ராதேவியிடம் ஆலோசனை செய்தார். பின்னர், உதித்சூர்யாவைத் தேடுவதற்கு அமைக்கப்பட்ட தனிப்படையில் உள்ள ஆண்டிபட்டி ஆய்வாளர் உஷா, தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு வந்து, இதுவரை செய்த விசாரணை ஆவணங்களை டி.எஸ்.பி-யிடம் ஒப்படைத்தார்.

udith surya’s Mother
udith surya’s Mother

இன்று, சி.பி.சி.ஐ.டி எஸ்.பி விஜயகுமார் தேனி வர இருக்கிறார். தொடர்ந்து உதித்சூர்யா மற்றும் அவரின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட இருக்கிறது. தேனி மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், துணை முதல்வர் எழிலரசன், மூன்று பெண் மருத்துவர்கள் ஆகியோரிடமும் இன்று விசாரணை நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகமே பரபரப்பாகக் காட்சியளிக்கிறது.