Published:Updated:

மதுரை சிறைக்கு உதித்சூர்யா மாற்றம்! - இரவில் நடந்தது என்ன?

மதுரை சிறைக்கு மாற்றவேண்டும் என கடைசி நேரத்தில் முடிவு எடுக்கப்பட்டதால், மாவட்ட காவல்துறையை இரவு அலர்ட் செய்திருக்கிறார்கள்.

udith Surya
udith Surya

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். இந்நிலையில், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா அவரின் தந்தை வெங்கடேசன் இருவரிடமும் தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

`மகனை டாக்டராக்க வேண்டும் என்ற ஆசையில் செய்துவிட்டேன்!' - உதித் சூர்யா தந்தை வாக்குமூலம்
Udith Surya
Udith Surya

சி.பி.சி.ஐ.டி தென் மண்டல கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் ஹார்ட்வின் ஜெகதீஸ்குமார், தேனி சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் சித்ராதேவி ஆகியோர் விசாரணை செய்து, உரிய முறையில் வாக்குமூலம் பதிவு செய்தனர். பின்னர், மருத்துவ பரிசோதனை முடித்து, தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் நேற்று இரவு 8.15 மணிக்கு ஆஜர்படுத்தினர்.

இருவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில், ஆண்டிபட்டி அருகே உள்ள தேக்கம்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட சிறைச்சாலைக்கு உதித்சூர்யாவும், அவரின் தந்தை வெங்கடேசனும் கொண்டுசெல்லப்பட்டனர். சிறைத்துறை அதிகாரிகளைச் சந்தித்துப் பேசிய பின்னர் திடீரென மதுரை சிறைக்கு இருவரையும் அழைத்துச் சென்றனர்.

Theni CBCID
Theni CBCID

இது தொடர்பாக காவல்துறையைச் சேர்ந்த ஒருவரிடம் பேசிய போது, ``தேனி சிறையில் உதித்சூர்யாவையும் அவரின் தந்தையையும் அடைக்கதான் நீதிபதி உத்தரவிட்டார். 10 மணிக்கு முன்பாகவே சிறைச்சாலைக்குச் சென்றுவிட்டனர். இருந்தபோதும் நீட் ஆள்மாறாட்ட வழக்கு தமிழகம் முழுவதும் கவனம் பெற்றுவிட்ட நிலையில், மத்திய சிறையில் அடைத்தால்தான் சரியாக இருக்கும் என தேனி சிறைச்சாலை நிர்வாகம் கூறியது.

உடனே, மேலிடத்தில் பேசி அதற்கான அனுமதி பெறப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க, மதுரை சி.பி.சி.ஐ.டி ஆய்வாளர் உட்பட ஒரு டீம் தேனி வந்திருந்தது. எனவே, அவர்களே உதித்சூர்யாவையும், வெங்கடேசனையும் மதுரை மத்திய சிறைவரை அழைத்துச் சென்றுவிட்டனர்” என்றார்.

மதுரை சிறைக்கு உதித்சூர்யா மாற்றம்! - இரவில் நடந்தது என்ன?

பெரிய வழக்கு என்பதால் மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும் என கடைசி நேரத்தில் முடிவு எடுக்கப்பட்டதால், மாவட்ட காவல்துறையை இரவு அலர்ட் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.