Published:Updated:

`அம்மன் சிலைகளைச் சேதப்படுத்திய கும்பல்!’ - குடியாத்தம் கோயிலில் நள்ளிரவில் அட்டூழியம்

சேதப்படுத்தப்பட்ட அம்மன் சிலை
சேதப்படுத்தப்பட்ட அம்மன் சிலை

குடியாத்தம் அருகே உள்ள கோயிலில், அம்மன் சிலைகளைச் கீழே தள்ளி சேதப்படுத்திய சம்பவம், அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த சேங்குன்றம் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்த காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், மூன்றரை அடி உயரத்தில் கருங்கல்லால் ஆன மூலவர் சிலையும் ஐம்பொன்னால் ஆன உற்சவர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

சேங்குன்றம்
சேங்குன்றம்

கடந்த வாரம், இந்தக் கோயிலில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தினமும் கோயிலுக்கு வந்து வழிபட்டுவருகிறார்கள்.

இந்த நிலையில், நள்ளிரவில் கோயில் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் உண்டியலையும் உடைத்துள்ளனர். உண்டியலில் காணிக்கை பணம் இல்லாததால் ஆத்திரமடைந்துள்ளனர்.

காளியம்மன் கோயில்
காளியம்மன் கோயில்

அதையடுத்து, மூலவர் சிலையையும் உற்சவர் சிலையையும் கீழே தள்ளி சேதப்படுத்தினர். சூலத்தையும் பிடுங்கி எறிந்துள்ளனர். அங்கிருந்த பொருள்களையும் தூக்கி வீசிச் சூறையாடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

விடிந்ததும் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் சாமி சிலைகள் கீழே தள்ளி சேதப்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவல் காட்டுத்தீயாகப் பரவியதால், ஊர் மக்கள் திரண்டனர்.

சேதப்படுத்தப்பட்ட அம்மன் சிலைகள்
சேதப்படுத்தப்பட்ட அம்மன் சிலைகள்

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு