Published:Updated:

`கொலையா, வனவிலங்கு தாக்குதலா?' - நடுக்காட்டில் கிடந்த சடலத்தால் மிரண்ட நீலகிரி வனத்துறை

ஆண் சடலம்
ஆண் சடலம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதியில் சிதைந்த நிலையில் எலும்புக்கூடாக ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையையொட்டிய மரப்பாலம் வனத்தில் மனித எலும்புக்கூடுகள் கிடப்பதாக அந்தப் பகுதி பழங்குடியின மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் போலீஸ், வனத்துறை
சம்பவ இடத்தில் போலீஸ், வனத்துறை

இதையடுத்து, காட்டுப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சிதைந்த நிலையில் எலும்புக்கூடாக ஒரு சடலம் பள்ளத்தில் கிடந்ததைப் பார்த்தனர். மிகவும் சரிவுப் பகுதி என்பதால் சடலத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

`ஆறு மாதங்களாகக் கிடந்த சடலம்!'- நடிகர் நாகார்ஜுனாவைச் சுற்றும் பண்ணைவீடு சர்ச்சை

உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சுமார் மூன்று மணிநேரம் போராடி தொட்டில் கட்டி சடலத்தை மேலே கொண்டுவந்தனர்.

சம்பவ இடத்தில் வனத்துறை
சம்பவ இடத்தில் வனத்துறை

இதுகுறித்து காவல்துறை தரப்பில் ``மரப்பலம் அருகில் உள்ள ஆற்றங்கரையில் உடல் சிதைந்து எலும்புக்கூடான நிலையில் ஒரு ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக இந்தச் சடலம் காட்டுக்குள் கிடந்திருக்க வாய்ப்புள்ளது.

வனவிலங்கு தாக்குதலா, கொலையா என்பது தெரியவில்லை. உடற்கூறாய்வு மற்றும் மரபணு சோதனைகளை முடித்து, பின்னர் அடையாளம் காணப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு