Published:Updated:

``யாரையும் நம்பமாட்டான்; பங்குக்காக கூட்டாளியே கொலை” - நீராவி முருகனின் `திகில்' பக்கங்கள்

நீராவி முருகன்

யாரையும் நம்பாத நீராவி முருகன், பாதுகாப்புக்காக எப்போதும் இரண்டு அடி நீளம் உள்ள கத்தியுடனே இருப்பான். அதோடு கொள்ளையடித்த நகைகளை பங்கு கொடுக்க விரும்பாத அவன் தனது நெருங்கிய கூட்டாளியையே கொலை செய்திருக்கிறான்.

``யாரையும் நம்பமாட்டான்; பங்குக்காக கூட்டாளியே கொலை” - நீராவி முருகனின் `திகில்' பக்கங்கள்

யாரையும் நம்பாத நீராவி முருகன், பாதுகாப்புக்காக எப்போதும் இரண்டு அடி நீளம் உள்ள கத்தியுடனே இருப்பான். அதோடு கொள்ளையடித்த நகைகளை பங்கு கொடுக்க விரும்பாத அவன் தனது நெருங்கிய கூட்டாளியையே கொலை செய்திருக்கிறான்.

Published:Updated:
நீராவி முருகன்

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் நீராவிமேடு மிடில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (43). இவன் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு என 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. நீராவிமேடு பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் தன்னுடைய பெயரோடு ஊரின் பெயரையும் முருகன் சேர்த்துக் கொண்டான். பிரபல கொள்ளையன் நீராவி முருகனுக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இதனிடையே ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவருடன் நீராவி முருகன் வாழ்ந்து வந்தான். கொள்ளையடிக்கும் நகைகளை விற்று அந்தப் பணத்தில் ஆடம்பரமாக வாழ்வதுதான் நீராவி முருகனின் லைஃப் ஸ்டைலாக இருந்தது.

என்கவுன்டர் செய்யப்பட்ட நீராவி முருகன்
என்கவுன்டர் செய்யப்பட்ட நீராவி முருகன்

2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வேலம் என்ற ஆசிரியை பள்ளி முடிந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது கண்களில் கூலிங் கிளாஸ், டிப்டாப்பாக உடையணிந்த நீராவி முருகன், வேலத்தை வழிமறித்து அவர் அணிந்திருந்த தங்க நகைகளை வழிப்பறி செய்தான். ஆசிரியை வேலம் நீராவி முருகனிடம் கெஞ்சியபோதும் ஈவு இரக்கமில்லாமல் கத்தியைக் காட்டி மிரட்டி நகைளைப் பறித்த அவன், பதற்றமில்லாமல் தப்பிச் சென்றான். இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி வைரலானது. இதையடுத்து நீராவி முருகனைப் பிடிக்க அப்போதைய துரைப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் புஷ்பராஜ், தாமோதரன், விஜயகுமார் அவனின் சொந்த ஊரான தூத்துக்குடிக்குச் சென்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தூத்துக்குடியில் நீராவி முருகனுடன் தொடர்பில் இருந்தவர்கள் பிடித்து போலீஸார் விசாரித்தபோது நீராவி முருகன், நகுலன் என்ற பெயரில் அந்தப்பகுதியில் உள்ள சுடலைமாடசாமி கோயிலுக்கு பொருளதவி செய்தது தெரியவந்தது. அதனால் கோயிலிலேயே பக்தர்கள் வேடத்தில் போலீஸார் காத்திருந்தனர். ஆனால் நீராவி முருகன் கோயிலுக்கு வரவில்லை. இதையடுத்து நீராவி முருகனின் மனைவி லட்சுமியிடம் போலீஸார் விசாரித்தபோது எப்போதாவது போனில் மட்டும் பேசுவார், செலவுக்குகூட பணம் தரமாட்டார். அதனால் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறேன் என கூறினார்.

இந்தச் சமயத்தில்தான் நெல்லையில் நீராவி முருகன், ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்கு வரும் ரகசிய தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக அங்குச் சென்று போலீஸார் பார்த்தபோது நீராவி முருகன், தெருவில் தனியாக நடந்து வந்தான். நீராவி முருகனைப் பிடிக்க சென்ற போலீஸாரை கத்தியால் தாக்கிய சம்பவங்கள் துரைப்பாக்கம் போலீஸாருக்கு நினைவில் வர ஸ்கெட்ச் போட்டு அவனைப் பிடிக்க வியூகம் அமைத்தனர்.

நீராவி முருகன்
நீராவி முருகன்

இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறுகையில், ``நீராவி முருகன் தனியாக நடந்து வருவதை உறுதி செய்ததும் மப்டியில் நாங்களும் அவனைப் பின்தொடர்ந்தோம். அப்போது பின்பகுதியிலிருந்து காவலர்கள் இருவர், நீராவி முருகனின் இரண்டு கைகளையும் மடக்கிப் பிடித்தோம். சுதாரித்துக் கொண்ட நீராவி முருகன், கத்தியை எடுத்து காவலர்களை வெட்ட முயன்றான். உடனே இன்னொரு காவலர், நீராவி முருகனின் கையிலிருந்த கத்தியை மடக்கிப் பிடித்தார். அடுத்து துப்பாக்கி முனையில் நீராவி முருகனைப் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்தோம். எங்களிடமிருந்து தப்பிக்க நீராவி முருகன் முயன்றபோது அவனின் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

உடனடியாக அவனுக்கு சிகிச்சை அளித்து விசாரணையை தொடங்கினோம். அப்போது பல இடங்களில் நீராவி முருகன் கொள்ளையடித்ததோடு வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததையும் ஒப்புக் கொண்டான். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகாரளிக்காததால் நீராவி முருகன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அதே நேரத்தில் நீராவி முருகன் மீது கொலை வழக்கை விட கொள்ளை வழக்குகள்தான் அதிகம் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீராவி முருகனுடன் தொடர்பிலிருந்த இரண்டு கூட்டாளிகளைப் பிடித்தோம். அப்போதுதான் அவன் யாரையும் நம்பமாட்டான் என்ற தகவல் தெரியவந்தது. ஏன், கொள்ளையடித்த நகைகளைப் பங்கு போட விரும்பாத நீராவி முருகன், கூட்டாளியைக் கூட கொலை செய்த தகவலும் தெரியவந்தது. இன்னொரு தகவலும் நீராவி முருகன் குறித்து தெரியவந்துள்ளது.

கொங்கு மண்டலம் பகுதியில் நீராவி முருகன் ஆள்கடத்தலிலும் ஈடுபட்டு வந்துள்ளான். அதன்மூலம் அவனுக்கு லட்சக்கணக்கில் வருமானம் கிடைத்துள்ளது. அந்தப் பணத்தைக் கொண்டு நீராவி முருகன் சொகுசு வாழ்க்கை வந்திருக்கிறான். தமிழகத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் ஆந்திரா, கேரளாவில் பதுங்கிக் கொள்வான். பழநி காவல் நிலைய குற்ற வழக்கில் நீராவி முருகனைப் பிடிக்கச் சென்றபோது அவன் என்கவுன்டரில் உயிரிழந்திருக்கிறான்" என்றனர்.

நீராவி முருகனை கைது செய்த  துரைப்பாக்கம் போலீஸ் டீம்
நீராவி முருகனை கைது செய்த துரைப்பாக்கம் போலீஸ் டீம்

நீராவி முருகனை தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்த சென்னையில் பணியாற்றும் உதவி கமிஷனர் ஒருவரிடம் பேசினோம். ``தூத்துக்குடியில் நடந்த கொலை வழக்கில் நீராவி முருகனை கைது செய்தோம். அவன் சிறுவயது முதல் குற்றச் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தான். தைரியமாக எந்தக் குற்றச் செயலையும் செய்வான். நீராவி முருகன், தூத்துக்குடியில் கொப்பரை என்ற டீமில் இருந்தான். இந்த டீமின் எதிரி கொம்பை டீம். சாராய பிசினஸ் மோதலில் இந்த டீம்களுக்கிடையே பழிக்குப்பழியாக கொலைகள் நடந்துள்ளன. நீராவி முருகனுக்கு தலைவனாக இருந்த ஒயின் சங்கர் கொலை செய்யப்பட்டப் பிறகு செயின் பறிப்பில் ஈடுபட தொடங்கினார். செயின் பறிப்பின் போது பெண்களை ஈவு இரக்கம் இல்லாமல் கத்தி முனையில் மிரட்டி அடி பணிய வைப்பான். அப்போது முதல் கத்தியோடு தான் நீராவி முருகன் சுற்றி வந்தான். அவனை பிடிக்கச் சென்ற காவலர்களையும் கத்தியை கொண்டு பல முறை தாக்கி தப்பிச் சென்றிருக்கிறான்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism