Published:Updated:

கரூர்: `நான்தான் கடன் பிரிவு மேலாளர்..!' - போன் மூலம் இளைஞரிடம் 45,500 ரூபாயை ஏமாற்றிய மர்ம நபர்

கரூர் ரயில்வே ஸ்டேஷன்
கரூர் ரயில்வே ஸ்டேஷன் ( நா.ராஜமுருகன் )

ஒரு லட்ச ரூபாய் தனிநபர் கடன் வழங்குவதற்கு பராமரிப்பு கட்டணமாக ரூ. 2,500 அனுப்பிவைக்குமாறு கூறியுள்ளார். இதை நம்பி குமார், அவரின் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தியிருக்கிறார். தொடர்ந்து, அந்த நபர் பணம் கேட்க, கூகுள் பே மூலம் ரூ.43 ஆயிரம் வரை அனுப்பிவைத்துள்ளார்.

இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகள்கொண்ட பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி, தனியார் ஐ.டி.ஐ ஊழியரிடம் ரூ.45,500 வரை மோசடி செய்த நபர் மீது, கரூர் சைபர் க்ரைம் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கரூர் ரயில்வே ஸ்டேஷன்
கரூர் ரயில்வே ஸ்டேஷன்
நா.ராஜமுருகன்
கரூர்: முழு ஊரடங்கு; சுவரில் துளையிட்டு 142 மதுபாட்டில்கள் கொள்ளை - டாஸ்மாக்கில் கைவரிசை

கரூர் மாவட்டம், கடவூர் கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர், அந்தப் பகுதியிலுள்ள துரைசாமி ஐ.டி.ஐ கல்லூரியில் பயிற்சி அலுவலராகப் பணியாற்றிவருகிறார். இவருக்கு பணத்தேவை இருந்திருக்கிறது. அதற்காக, கடன் வாங்குவதற்கு நினைத்திருக்கிறார். இந்தநிலையில், முகநூல் வழியே, பஜாஜ் நிறுவனத்தின் மூலம் கடன் பெற்றுத்தருவதாக ஒரு விளம்பரத்தை குமார் பார்த்திருக்கிறார். உடனே, அதிலுள்ள செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டிருக்கிறார். செல்போனில் மறுமுனையில் பேசிய நபர் தன்னை, 'அனுஷ்மன் சாகு' என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, 'நான் கடன் பிரிவு மேலாளர்' என அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிரார். குமாரின் கடன் தேவையை புரிந்துகொண்ட அந்த நபர், நைச்சியமாக ஒரு லட்ச ரூபாய் தனிநபர் கடன் வழங்குவதற்கு பராமரிப்பு கட்டணமாக ரூ.2,500 அனுப்பிவைக்குமாறு கூறியுள்ளார். இதை நம்பி குமார், அவரின் வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்தியிருக்கிறார். தொடர்ந்து, அந்த நபர் பணம் கேட்க கூகுள் பே மூலம் ரூ. 43,000 வரை அனுப்பிவைத்துள்ளார்.

கரூர் எஸ்.பி அலுவலகம்
கரூர் எஸ்.பி அலுவலகம்
நா.ராஜமுருகன்

ஆனால், கடன் தொகை வழங்கப்படாததால், சந்தேகமடைந்த குமார் பஜாஜ் தனிநபர் கடன் பிரிவில் உள்ளவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, 'மேற்கூறிய நபர் கடன் பிரிவில் பணியாற்றவில்லை. நாங்கள் அதுபோல் விளம்பரம் செய்யவில்லை. எங்கள் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி, யாரோ உங்களை ஏமாற்றியிருக்கிறார்கள்' எனத் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குமார், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சைபர் குற்றப்பிரிவு போலீஸார் மோசடி மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தனியார் ஐ.டி.ஐ கல்லூரியில் பணியாற்றி இளைஞரை, மர்ம நபர் ஒருவர் சமூக வலைதளம் மூலமாக ஏமாற்றி, பண மோசடி செய்திருப்பது அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியடையவைத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு