Election bannerElection banner
Published:Updated:

கரூர்: 'ஹலோ, வங்கி தலைமை அதிகாரி பேசுறேன்!' - இளைஞரிடம் ரூ.32,932 திருடிய மர்ம மனிதர்

கரூர்
கரூர் ( நா.ராஜமுருகன் )

நாகராஜனிடம், கடன் அட்டையில் க்ளைம் செய்யப்படாமல் இருந்த ரிவார்டு புள்ளிகளை ரொக்கமாக மாற்றி தருவதாக கூறி, ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவிக்கும்படி கூறியிருக்கிறார். அதை நம்பிய நாகராஜன், ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவித்திருக்கிறார்.

வங்கி அதிகாரி போல தொலைபேசியில் பேசி, கரூர் இளைஞர் ஒருவரிடம், அவது கிரெடிட் கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை பெற்று, அதன்மூலம் அந்த இளைஞரின் வங்கி கணக்கிலிருந்து, ரூ. 32,932 த்தை மர்ம மனிதர் ஒருவர் திருடிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர்
கரூர்
நா.ராஜமுருகன்

கரூர் மாவட்டம், வாங்கல் அருகே உள்ள அக்கரகாரம் பகுதியில் வசிப்பவர் நாகராஜன் (வயது: 36). இவருக்கு, கடந்த ஏப்ரல் 12 - ம் தேதி ஆர்.பி.எல் மற்றும் எஸ்.பி.ஐ ஆகிய இரு வங்கிகளில் கொடுக்கப்பட்ட கடன் அட்டைகளில் (கிரெடிட் கார்டு) பதிவுசெய்யப்பட்ட செல்போனுக்கு, 'ஆர்.பி.எல் வங்கி கடன் அட்டை பிரிவின் தலைமை அதிகாரி முருகன் பேசுகிறேன்' என்ற அறிமுகத்தோடு, ஒரு மர்ம நபர் பேசியிருக்கிறார்.

அந்த நபர் நாகராஜனிடம், கடன் அட்டையில் க்ளைம் செய்யப்படாமல் இருந்த ரிவார்டு புள்ளிகளை ரொக்கமாக மாற்றி தருவதாக கூறி, அதற்கு உங்களது செல்போனுக்கு வரும் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவிக்கும்படி கூறியிருக்கிறார். அதை நம்பிய நாகராஜன், அந்த மர்ம மனிதரிடம் க்ரெடிட் கார்டின் ரகசிய குறியீட்டு எண்ணை தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், நாகராஜன் கணக்கிலிருந்து ரூ. 26,882, ரூ. 6,050 என மொத்தம் ரூ. 32,932 பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனால், அதிர்ச்சி அடைந்த நாகராஜன், இதுகுறித்து வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் அருகே வங்கி அதிகாரி போல் பேசி, இளைஞர் ஒருவரின் கடன் அட்டையின் ரகசிய எண்ணைப் பெற்று, அதன்மூலம் நூதனமான முறையில் பணம் பறித்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர்: அடைக்கப்பட்ட சாலை; திறக்காத நகராட்சி நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்த இளைஞர்கள் போராட்டம்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு