Published:Updated:

கரூர்: `ஒன்றியச் செயலாளரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை இல்லை!' - கொதிக்கும் தே.மு.தி.க மா.செ

பேட்டியளிக்கும் கே.வி.தங்கவேல்
பேட்டியளிக்கும் கே.வி.தங்கவேல்

கடந்த ஜூலை மாதம், 22-ம் தேதி அன்று கரூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெயக்குமாரை அடையாளம் தெரியாத கூலிப்படை ஆட்கள் தாக்கி, படுகாயம் ஏற்படுத்தினர். மர்மக் கும்பலால் கடுமையான தாக்குதலுக்குண்டான ஜெயக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

``தே.மு.தி.க கட்சியின் கரூர் ஒன்றிய செயலாளரைத் தாக்கிய மர்மக் கும்பல் மீது சம்பவம் நடந்து நான்கு மாதங்கள் கடந்தும் இதுவரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், கரூர் மாவட்ட தே.மு.தி.க சார்பில் வரும் 2-ம் தேதி காவல்துறையினரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம்" என்று தே.மு.தி.க மாவட்டச் செயலாளர் கே.வி.தங்கவேல் தெரிவித்தார்.

பேட்டியளிக்கும் கே.வி.தங்கவேல்
பேட்டியளிக்கும் கே.வி.தங்கவேல்
`கரூரில் நலிவைச் சந்திக்கும் தொழில்கள்!’ - லக்ஷ்மி விலாஸ் வங்கி விவகாரத்தில் ஜோதிமணி எம்.பி

கரூர் தே.மு.தி.க நகரச் செயலாளராக பணியாற்றிவருபவர் எஸ்.ஆர்.ஜெயக்குமார். இவரை கடந்த ஜூலை, 22-ம் தேதி மர்மக் கும்பல் ஒன்று கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்குதல் நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. படுகாயமடைந்த ஜெயக்குமார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தநிலையில், ஜெயக்குமார் மீது தாக்குதல் நடத்திய மர்மக் கும்பல் மீது, காவல் துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தே.மு.தி.க-வினர் கொதிக்கின்றனர். இந்தநிலையில், கரூர் மாவட்ட தே.மு.தி.க அலுவலகத்தில், மாவட்ட அவைத் தலைவர் அரவை எம்.முத்து தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் மாவட்டச் செயலாளர் கே.வி.தங்கவேல்,

பேட்டியளிக்கும் கே.வி.தங்கவேல்
பேட்டியளிக்கும் கே.வி.தங்கவேல்

``கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி அன்று கரூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெயக்குமாரை அடையாளம் தெரியாத கூலிப்படை ஆட்கள் தாக்கி படுகாயம் ஏற்படுத்தினர். மர்மக் கும்பலால் கடுமையான தாக்குதலுக்குண்டான ஜெயக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தநிலையில், இந்தச் சம்பவம் குறித்து நாங்கள் அளித்த புகாரின்பேரில், வெங்கமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆனால், வெறும் வழக்கு மட்டுமே பதிவு செய்திருக்கும் காவல்துறை இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூலிப்படை ஆட்களைக் கொண்டு தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கரூர் நகர காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், கரூர் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் வலியுறுத்தப்பட்டது. நான்கு மாதங்கள் கடந்தும் நடவடிக்கை இல்லை.

வெங்கமேடு காவல் நிலையம்
வெங்கமேடு காவல் நிலையம்

இதனால், தே.மு.தி.க நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் கேப்டனின் உத்திரவிற்கிணங்க, பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனைக்கிணங்க, வரும் 2-ம் தேதி அன்று கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தே.மு.தி.க சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறோம். தே.மு.தி.க ஒன்றியச் செயலாளர் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை தேவை. ஒன்றியச் செயலாளரைத் தாக்கியவர்கள் மீது வெங்கமேடு காவல் நிலைய போலீஸார் நடவடிக்கை எடுக்கும்வரை தொடர் போராட்டம் நடத்துவோம்" என்றார் ஆவேசமாக!

அடுத்த கட்டுரைக்கு