Published:Updated:

கோவை: அரைகுறை ஆடை; கையில் ஆயுதங்கள்! - அதிர்ச்சி கொடுக்கும் நள்ளிரவு ஆசாமிகள்

கோவை சைக்கோ ஆசாமிகள்
கோவை சைக்கோ ஆசாமிகள்

நள்ளிரவில் மேலாடையின்றி, கையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் ஆசாமிகளால் கோவை மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோவை இருகூர் அருகே உள்ள தீபம் நகர் பகுதியில் கடந்த வாரம் நள்ளிரவு சுமார் 7 பேர், மேல் சட்டையின்றி கையில், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் உலா வந்துள்ளனர். இந்தக் காட்சிகள் அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சைக்கோ ஆசாமி
கோவை சைக்கோ ஆசாமி
கோவை: `கொரோனா கொல்லி' மைசூர்பா! - ஸ்வீட் கடைக்கு சீல்; உரிமமும் ரத்து

தீபம் நகரில் பதிவான அதே நாள், பீளமேடு பாலகுரு கார்டன் பகுதியிலும் இதேபோல 3 ஆசாமிகள் முகங்களில் துணிகள் அணிந்து, அரைகுறை ஆடையுடன் சுற்றும் வீடியோ காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும், பீளமேடு பகுதியில் மூன்று வீடுகளின் பூட்டை உடைத்துத் திருட முயற்சி நடைபெற்றுள்ளது. அதேபோல, சிங்காநல்லூர் பகுதியிலும் திருட்டு முயற்சி நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக பீளமேடு மற்றும் சிங்காநல்லூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சைக்கோ ஆசாமி
கோவை சைக்கோ ஆசாமி

மேலாடை இல்லாமல் உலா வந்த அந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் அதிகாலை நேரத்தில் கையில் ஆயுதங்களுடன் எதற்காக வீடுகளை நோட்டமிட்டவாறு சென்றார்கள் என்பது குறித்தும் போலீஸார் தனிப்படைகளை அமைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் அந்தப் பகுதியில் இருந்த சந்தன மரங்களை வெட்டிக் கடத்தினர். இதையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து சிலரை கைது செய்து சிறையில் அடைந்தனர்.

கோவை சைக்கோ ஆசாமிகள்
கோவை சைக்கோ ஆசாமிகள்

அதேபோல, தடாகம் சாலை சுற்றுவட்டாரப் பகுதிகளில், நள்ளிரவில் பெட்ரூம் ஜன்னல்களை நோட்டமிட்ட ஒரு சைக்கோ ஆசாமி, பெண்களின் உள்ளாடை மற்றும் செருப்புகளைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

எனவே, தற்போது மேலாடைகள் இன்றிச் சுற்றும் ஆசாமிகளும் அந்தக் கும்பல்களைச் சேர்ந்தவர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு