Published:Updated:

உ.பி:`உன்னைப் பணம் கொடுத்து வாங்கியுள்ளோம்!' - திருமணம் என்ற பெயரில் சிறுமிக்கு நடந்த பாலியல் கொடுமை

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை ( விகடன் )

`நாங்கள் உன்னைப் பணம் கொடுத்து வாங்கியிருக்கிறோம். அதனால் அவர்கள் அப்படித்தான் நடந்துகொள்வார்கள். நீ அவர்கள் கேட்பதைச் செய்ய வேண்டும்’ எனச் சிறுமிக்குக் கட்டளையிட்டுள்ளனர்.

திருமணம் என்னும் பெயரில் விற்பனை செய்யப்பட்ட 17 வயது சிறுமி, தன் கணவர் என நம்பியவரின் குடும்பத்தினராலேயே பல மாதங்களாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்திலிருந்து ராஜஸ்தான், கோட்டா நகருக்குச் செல்லும் பயணிகள் ரயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 17 வயது சிறுமி ஒருவர் பயணித்திருக்கிறார். தனியாக, பயந்த நிலையிலிருந்த அந்தச் சிறுமியை மீட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் இந்தத் தகவலை தெரிவித்திருக்கிறார்.

பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியை கோரக்பூர் அவத் எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் மீட்டனர். அதன் பின்னர் மாலை அவரை கோட்டா நகரிலுள்ள குழந்தைகள் நலக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மீட்கப்பட்ட அந்தப் பெண் மிகவும் அதிர்ச்சியடைந்திருந்ததால், ஆலோசனைக்குழுவின் உதவியுடன் அந்தச் சிறுமி மெதுவாகப் பேச ஆரம்பித்தார்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை
representational image

பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமி உத்தரப்பிரதேசத்திலுள்ள தியோரி மாவட்டத்தில் வசிக்கிறார். இவர் இளங்கலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படிக்கையில், அவரது பெற்றோரும், தாய் மாமனும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறுமியின் விருப்பத்துக்கு மாறாக, அவருடைய பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்குத் திருமணம் செய்துவைத்துள்ளனர்.

இந்தக் குழந்தையை, திருமணத்துக்குப் பிறகு அவருடைய கணவரின் சகோதரரும் மைத்துனரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்துத் தன் கணவரிடமும் மாமனாரிடமும் அவர் கூறியபோது, அவர்கள், `நாங்கள் உன்னைப் பணம் கொடுத்து வாங்கியிருக்கிறோம். அதனால் அவர்கள் அப்படித்தான் நடந்துகொள்வார்கள். நீ அவர்கள் கேட்பதைச் செய்ய வேண்டும்’ எனக் கட்டளையிட்டிருக்கிறார்கள்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

மேலும், அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்வதை வீடியோவாகப் பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

தொடர்ந்து அந்தப் பெண்ணை கணவரும் மாமனாரும் கடத்திக்கொண்டு போய் வேறு இடத்தில் வைத்துள்ளனர். அங்கிருந்து எப்படியோ தப்பித்த அந்தச் சிறுமி தனது தாய் மாமாவிடம் சென்று அவர்களின் மேல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கக் கூறியுள்ளார். ஆனால், அவர் புகாரளிக்க விரும்பவில்லை என்பதை அறிந்த அந்தச் சிறுமி கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வீட்டைவிட்டுத் தப்பித்து ரயிலில் பயணித்திருக்கிறார்.

அந்தச் சிறுமியைப் பார்த்த டிக்கெட் பரிசோதகர், சந்தேகத்தின்பேரில் அவரை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார். அதன் பிறகுதான் இவை அத்தனையும் தெரியவந்திருக்கின்றன.

குழந்தைகள் நல அமைப்பு இந்த விஷயத்தை அறிந்ததும், அந்தச் சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பிவைத்தது. அதோடு மட்டுமல்லாமல், அவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது சிறுமியை விற்றுவிட்டதாகவும், கணவர் குடும்பத்தினர் மீது பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கையும் காவல்துறையில் பதிவு செய்துள்ளது.

சென்னை: பிரபல பாடகியின் மகளுக்குப் பாலியல் தொல்லை!-பாதிரியார் முதல் உறவினர்கள் வரை விசாரிக்க முடிவு
அடுத்த கட்டுரைக்கு