Published:Updated:

சிகிச்சைக்கு வந்த பெண்; ஊசிபோட்டு வன்கொடுமை செய்த மருத்துவர் - வீடியோவால் வெளியான கொடூரம்

பாலியல் வன்கொடுமை

அடையாளம் தெரியாத நபரால், இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவத்தொடங்கியதையடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

சிகிச்சைக்கு வந்த பெண்; ஊசிபோட்டு வன்கொடுமை செய்த மருத்துவர் - வீடியோவால் வெளியான கொடூரம்

அடையாளம் தெரியாத நபரால், இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவத்தொடங்கியதையடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேச மாநிலத்தில், மருத்துவர் ஒருவர் சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு ஊசிபோட்டு பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், அடையாளம் தெரியாத நபரால், இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவத்தொடங்கியதையடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டப் பெண், போலீஸில் புகாரளித்திருக்கிறார். அந்தப் புகாரில், இந்தச் சம்பவம் குறித்து யாரிடமாவது தெரிவித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மருத்துவர் தன்னை மிரட்டியதாகக் கூறப்பட்டிடுக்கிறது. போலீஸ் விசாரணையில், பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் மருத்துவர் கர்குபூர் பகுதியைச் சேர்ந்த அஜ்மல் என்றும், அந்தப் பகுதியில் இவர் தனியாக கிளினிக் ஒன்று நடத்திவந்திருக்கிறார் என்றும் தெரியவந்திருக்கிறது.

பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர் கைது
பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர் கைது

மேலும், அஜ்மல் கடந்த செவ்வாயன்று, பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக நேரில் சந்தித்தபோது, பெண்ணுக்கு ஊசிபோட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதையடுத்து போலீஸாரும் குற்றம்சாட்டப்பட்ட நபரைக் கைதுசெய்தனர்.

இது குறித்து பேசிய போலீஸ் அதிகாரி ஆகாஷ் தோமர், ``பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் மீது வியாழக்கிழமை வழக்கு பதிவுசெய்யப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டார். மேலும், அந்தப் பெண் தற்போது மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்" எனத் தெரிவித்தார்.