Published:Updated:

தனது அப்பா, அரசியல் பிரமுகர்கள் என 28 பேரால் பாலியல் வன்கொடுமை; 17வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்!

முதல் பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்குப் பிறகு அந்தச் சிறுமியை அவரது தந்தை மயக்க மருந்து கலந்த உணவைக் கொடுத்து ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூரைச் சேர்ந்த 17-வயது சிறுமியை சில ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அவரது தந்தை, சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிப் பிரமுகர்கள், நெருங்கிய உறவினர்கள் உட்பட 28 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

லக்னோவிலிருந்து மும்பை வந்த ரயிலில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; தடுக்க முயன்ற பயணிகள் மீது தாக்குதல்
சிறுமி பாலியல் வன்கொடுமை
சிறுமி பாலியல் வன்கொடுமை
representational image

முதல் தகவல் அறிக்கையில், சிறுமியின் தந்தை ஆபாசப் படங்களைக் காட்ட முற்பட்டிருக்கிறார். மேலும் அவர் 6-ம் வகுப்பு படிக்கும்போது பாலியல் செயல்களில் ஈடுபடுத்த தந்தை முயன்றிருக்கிறார். அந்தச் சிறுமி மறுத்ததால் அவருக்குப் புதுத்துணி வாங்கிக்கொடுத்து பைக்கில் ஊரின் ஒதுக்குப்புறமாக ஒரு பகுதிக்கு அழைத்துச் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார். மேலும் இதுகுறித்து தாயிடம் கூறினால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார் எனப் பதிவாகியிருக்கிறது.

பெண்ணின் தந்தை, சமாஜ்வாடி கட்சியின் மாவட்டத் தலைவர் திலக் யாதவ், நகரத் தலைவர் ராஜேஷ் ஜெயின் ஜோஜியா, பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டத் தலைவர் தீபக் அகிர்வார் உட்பட 28 பேர்மீது பிரிவு 354, 376-D (பாலியல் வன்கொடுமை), 323 (தானாகச் சென்று காயப்படுத்துவது), 506 (மிரட்டல்) மற்றும் பிற ஐபிசி சட்டங்கள், பிரிவு 5/6ன் படி, போக்ஸோ சட்டத்திலும் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர் லலித்பூர் காவல்துறையினர்.

முதல் பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்குப்பிறகு அந்த பெண்ணை அவரது தந்தை மயக்க மருந்து கலந்த உணவைக் கொடுத்து ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு பலரால் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

அந்த சிறுமி பலமுறை மறுத்து கதறிய போதும் அவரின் தந்தை, திலக் யாதவ் மற்றும் அவரின் நண்பர்கள், உறவினர்கள் அந்த சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க உறுதுணையாக இருந்திருக்கிறார். மேலும் சிறுமியின் உறவினர்கள் நான்கு பேரும் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரில் தெரிவித்திருக்கிறார். வழக்குப் பதிவான கொஞ்ச நேரத்தில் புகாரை மறுத்து சமூக வலைத்தளத்தில் அறிக்கை வெளியிட்டார் சாமாஜ்வாதி தலைவர் திலக். தன் மீதான நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக வழக்க தொடர்ந்திருக்கின்றனர் என்றும் கூறியிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு