Published:Updated:

உ.பி: மசூதிக்கு அருகே முஸ்லிம் பெண்களுக்குப் பாலியல் மிரட்டல்... சாமியார் மீது வழக்கு பதிவு!

பஜ்ரங் முனி தாஸ் ( ட்விட்டர் )

உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஒருவர் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உ.பி: மசூதிக்கு அருகே முஸ்லிம் பெண்களுக்குப் பாலியல் மிரட்டல்... சாமியார் மீது வழக்கு பதிவு!

உத்தரப்பிரதேசத்தில் சாமியார் ஒருவர் முஸ்லிம் பெண்களுக்கு எதிராக பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
பஜ்ரங் முனி தாஸ் ( ட்விட்டர் )

உத்தரப்பிரதேச மாநிலம் , சீதாபூர் மாவட்டத்தில் உள்ள கைராபாத் என்ற இடத்தில், மசூதிக்கு வெளியே, அங்கிருந்த பொது மக்களிடையே பஜ்ரங் முனி தாஸ் என்ற சாமியார் ஒருவர் ஜீப்பில் பேசியபடி வந்தார். அப்போது பேசிய அவர், ``ஒரு இந்து பெண்ணை கிண்டல் செய்தால், முஸ்லிம் பெண்களைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்வேன்'' என்று மிரட்டியதாகக் கூறப்பட்டது. இவரின் பேச்சை கேட்டு அங்கிருந்தவர்கள் பலமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த வீடியோவைப் பகிர்ந்து ஆல்ட்நியூஸின் இணை நிறுவனர் முகமது ஜுபை தனது டிவிட்டர் பக்கத்தில், ``இந்த வீடியோ ஏப்ரல் 2-ம் தேதி எடுக்கப்பட்டது. ஆனால் காவல் துறையினர் ஐந்து நாள்களுக்குப் பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' எனப் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், பெண்களுக்கு வெளிப்படையாக பாலியல் மிரட்டல் விடுத்த பஜ்ரங் முனி தாஸ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த சாமியாரைக் கைது செய்ய வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism