Published:Updated:

சூதாட்டத்தில் தோற்றதால் கணவன் எடுத்த விபரீத முடிவு! - நீதிமன்றத்தை நாடிய மனைவி

கலிலுல்லா.ச

`என்னை மன்னித்துவிடு’ என்று கூறி நம்பிச்சென்ற அந்தப் பெண்ணுக்கு மீண்டும் அந்தக் கொடுமை அரங்கேறியுள்ளது.

சூதாட்டம்
சூதாட்டம்

`சூது’ ஒரு மனிதனை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும். அதனுடன் `மது’ இணைந்தால் சொல்லவே வேண்டாம். இந்த இரண்டுக்கும் அடிமையானவர் என்ன வேண்டுமானாலும் செய்யத்துணிவார். அப்படியொரு நெஞ்சை பதறவைக்கும், செயல்தான் உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உ.பியில் உள்ள ஜான்பூரைச்சேர்ந்த ஒருவர் சூதாட்டத்தில் அதீத ஈடுபாடு கொண்டவர். அவர், தொடக்கத்தில் பணத்தை வைத்து சூதாடியுள்ளார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

ஒரு கட்டத்தில் பணம் காலியாவே என்ன செய்வதென்று தெரியாமல், `சூதாட்டத்தில் தோற்றால், என் மனைவியைக் கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்யலாம்’ என்று பந்தயம் கட்டியுள்ளார். நண்பர்கள் அருண் மற்றும் அனில் ஆகிய இருவரும் அடிக்கடி அவர் வீட்டுக்கு வந்து சூதாடுவதும், மது அருந்துவதும் வழக்கம். சம்பந்தபட்ட தினந்தன்று, பந்தயத்தில் அவர் தோற்றதால், வீட்டுக்கு வந்த அருண் மற்றும அனில் ஆகியோர் அவரது மனைவியைக் கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்தக் கொடூர சம்பவத்துக்குப் பிறகு, அந்தப் பெண் அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கு வந்த கணவனோ,``என்னை மன்னித்துவிடு, தெரியாமல் நடந்துவிட்டது’' என்று மன்னிப்பு கேட்டுள்ளார். அவரது மன்னிப்பை ஏற்று, அந்தப் பெண் கணவருடன் காரில் ஏறி வீட்டுக்குச் சென்றுள்ளார்.

பாலியல் கொடுமை
பாலியல் கொடுமை

அப்போது வழியில் காரை நிறுத்தி, அவரது நண்பர்களிடம் மீண்டும் ஒருமுறை அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்துள்ளார். இந்தக் கொடுமையையடுத்து, அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், காவல்துறை அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். பின்பு நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.