Published:Updated:

வேலை தேடி அலைந்த இளைஞர்: திரைப்பட பாணியில் கண்பார்வையைப் பறித்து ரூ.70,000-க்கு விற்கப்பட்ட கொடூரம்

யாசகம் ( pixabay )

உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவரின் கை கால்கள் உடைக்கப்பட்டு, கண் குருடாக்கப்பட்டு, பிச்சைக்காரக் கும்பல் தலைவனிடம் ரூ.70,000-க்கு விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலை தேடி அலைந்த இளைஞர்: திரைப்பட பாணியில் கண்பார்வையைப் பறித்து ரூ.70,000-க்கு விற்கப்பட்ட கொடூரம்

உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவரின் கை கால்கள் உடைக்கப்பட்டு, கண் குருடாக்கப்பட்டு, பிச்சைக்காரக் கும்பல் தலைவனிடம் ரூ.70,000-க்கு விற்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
யாசகம் ( pixabay )

`நான் கடவுள்' படத்தில் மாற்றுத்திறனாளிகளை ஒருவன் விலைக்கு வாங்கி பிச்சையெடுக்கவைப்பதுபோல, உத்தரப்பிரதேச மாநிலத்தில், வேலை தேடி அலைந்துகொண்டிருந்த இளைஞரின் கை கால்கள் உடைக்கப்பட்டு, கண் பார்வை பறிக்கப்பட்டு, ஒரு கும்பல் தலைவனிடம் ரூ.70,000-க்கு ஒருவனால் விற்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் சுரேஷ் மஞ்சி என்பவர், வேலை தேடிக்கொண்டிருந்தபோது, அந்தச் சமயத்தில் அறிமுகமான விஜய்யால் திடீரென ஒருநாள் கடத்தப்பட்டார்.

காவல்துறை
காவல்துறை

அதையடுத்து விஜய், சுரேஷ் மஞ்சியின் கை கால்களை உடைத்து, கண்ணில் ரசாயனம் ஊற்றிக் கண் பார்வையைப் பறித்து, டெல்லியிலுள்ள ஒரு கும்பலின் தலைவன் என அறியப்படும் ராஜ் என்பவரிடம் ரூ.70,000-க்கு விற்கிறார். அங்கு அவர்கள் செய்த சித்ரவதையால் உடல்நிலை மோசமடைந்த சுரேஷ் மஞ்சியை, அவர்கள் மீண்டும் விஜய்யிடம் கான்பூருக்கே அனுப்பியிருக்கின்றனர். திருப்பியனுப்பப்பட்ட அந்த இளைஞரை, விஜய் யாசகம் செய்யுமாறு வற்புறுத்தியிருக்கிறார். அப்போது ஏதோவொருநாள், கித்வாய்நகர் சந்திப்பில் ஒரு வழிப்போக்கரின் உதவியுடன் தன்னுடைய சகோதரர்களைச் சந்தித்த சுரேஷ் மஞ்சி ஒருவழியாகத் தன் குடும்பத்திடம் சேர்ந்திருக்கிறார்.

யாசகம்
யாசகம்
pixabay

அதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த அந்தப் பகுதி கவுன்சிலர் பிரசாந்த் சுக்லா, இது தொடர்பாக போலீஸில் புகாரளிக்குமாறு, பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் கூறியிருக்கிறார். பின்னர் இது குறித்து காவல்துறை அதிகாரி விகாஸ் பாண்டே, ``அவருக்கு நடந்த கொடுமை குறித்து உள்ளூர் எம்.எல்.ஏ ஒருவர் தகவல் கொடுத்தார். புகார் ஏற்கப்பட்டுவிட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர் தற்போது மருத்துவச் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

மேலும், மற்றொரு காவல்துறை அதிகாரி பிரமோத் குமார், இந்த வழக்கில் மூன்று பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும், விசாரணைக்காகத் தனிக்குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.