Published:Updated:

பாலியல் வன்கொடுமை: குற்றவாளி எனக் கைதானவர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுவிப்பு!

தீர்ப்பு

"நான் குற்றவாளி இல்லை என நீதிமன்றத்துக்குத் தெரிய 22 வருடங்கள் ஆகிவிட்டன." - அனுஜா ஜெய்ஸ்வால்

பாலியல் வன்கொடுமை: குற்றவாளி எனக் கைதானவர் 22 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என விடுவிப்பு!

"நான் குற்றவாளி இல்லை என நீதிமன்றத்துக்குத் தெரிய 22 வருடங்கள் ஆகிவிட்டன." - அனுஜா ஜெய்ஸ்வால்

Published:Updated:
தீர்ப்பு

2000 -ம் ஆண்டு, ஆகஸ்ட் 26-ம் தேதி உத்தரப்பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த16 வயது சிறுவன் அனுஜா ஜெய்ஸ்வால் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதாடிவந்தார். இந்த நிலையில், கடந்த வியாழன் கிழமை அன்று சிறார் நீதி வாரியத்தின் முதன்மை மாஜிஸ்ட்ரேட் நரேஷ் குமார் திவாகர், உறுப்பினர்கள் சாதனா குப்தா, பிரசாந்த் சிங் ராகவ் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "2000-ம் வருடம் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நபர் குற்றவாளி என நிரூபிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் தவறிவிட்டார். எனவே குற்றம்சாட்டப்பட்டவர் நிரபராதி" என உத்தரவிட்டு விடுதலை செய்தது.

 நீதிமன்றம்
நீதிமன்றம்

இந்த நிலையில், ஏறத்தாழ 22 ஆண்டுகள் குற்றவாளி என அழைக்கப்பட்ட அந்த நபர் சமீபத்தில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "16 வயதில் எந்தக் குற்றமும் செய்யாத நான் ஒரு நிலத் தகராறில் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டேன். அப்போதிலிருந்தே நான் குற்றமற்றவன் எனக் கூறிவந்தேன்.

ஆனால் நான் குற்றவாளி இல்லை என நீதிமன்றத்துக்குத் தெரிய 22 வருடங்கள் ஆகிவிட்டன. கடைசியாக, நான் 'பாலியல் வன்கொடுமை குற்றவாளி' என்ற குறிச்சொல்லிலிருந்து விடுபட்டேன். ஆனால், இத்தனை வருடமாக இந்தக் களங்கத்தை எதிர்கொள்வது கடினமாக இருந்தது. எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் வேதனையாகவும் அவமானமாகவும் இருக்கிறது" என வேதனை தெரிவித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!