Published:Updated:

வேறு திருமணம் செய்துகொண்ட காதலி... ஆத்திரத்தில் உடலை 6 பாகங்களாக வெட்டி வீசிய காதலன்!

கொலை ( சித்தரிப்புப் படம் )

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தன் முன்னாள் காதலியை குடும்பத்தாரின் உதவியுடன் ஆறு துண்டுகளாக வெட்டிக் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வேறு திருமணம் செய்துகொண்ட காதலி... ஆத்திரத்தில் உடலை 6 பாகங்களாக வெட்டி வீசிய காதலன்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தன் முன்னாள் காதலியை குடும்பத்தாரின் உதவியுடன் ஆறு துண்டுகளாக வெட்டிக் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
கொலை ( சித்தரிப்புப் படம் )

உத்தரப்பிரதேச மாநிலம், அசம்கர் பகுதியிலுள்ள கிணற்றில் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் கிடப்பதாகச் சில தினங்களுக்கு முன்பு காவல்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, கிணற்றில் அரை நிர்வாணமான, தலை இல்லாத உடலை மீட்டிருக்கிறது. மேலும், அந்த உடல் பாகத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர். அதன் பிறகு, அந்த உடல் ஆராதனா (20) என்ற பெண்ணின் உடல் என்பது உறுதியானது. இந்த நிலையில், காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

வெட்டிக் கொலை
வெட்டிக் கொலை

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரி, ``ஆராதனா என்ற பெண்ணை அசம்கர் மாவட்டத்திலுள்ள இஷாக்பூர் கிராமத்தில் வசித்துவந்த யாதவ் என்ற இளைஞர் காதலித்துவந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் ஆராதனாவை அவருடைய குடும்பத்தினர் வேறொரு நபருக்குத் திருமணம் செய்துவைத்திருக்கின்றனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த யாதவ், தன் பெற்றோர், உறவினர் சர்வேஷ் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் ஆராதனாவைக் கொலை செய்யத் திட்டமிட்டிருக்கிறார். திருமணத்துக்குப் பிறகும் ஆராதனாவும் யாதவும் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 9-ம் தேதி யாதவ், ஆராதனாவை தன்னுடைய பைக்கில் கோயிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதன் பிறகு ஆராதனாவைக் கரும்பு தோட்டத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு தன் உறவினரான சர்வேஷின் உதவியுடன், கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கிறார். பின்னர் இருவரும் ஆராதனாவின் உடலை ஆறு பகுதிகளாக வெட்டி, பாலித்தீன் பையில் அடைத்து கிணற்றில் வீசியிருக்கிறார்கள். அதன் பிறகே ஊர்வாசிகளால் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

கைது
கைது

குற்றம்சாட்டப்பட்ட யாதவை, ஆராதனாவின் தலைப் பகுதியை கண்டெடுக்க நேற்று அழைத்துச் சென்றபோது, அங்கே அவர் மறைத்துவைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து எங்களைச் சுடத் தொடங்கினார். அவரிடமிருந்து தற்காத்துக்கொள்ள அவர் காலில் சுடவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இந்த வழக்கில் இதுவரை கூரிய முனைகள் கொண்ட ஆயுதம், நாட்டு கைத்துப்பாக்கி, தோட்டா ஆகியவை மீட்கப்பட்டிருக்கின்றன. தலைமறைவாகியிருக்கும் சர்வேஷைத் தேடிவருகிறோம். விசாரணை நடந்துவருகிறது" எனத் தெரிவித்தார்.