Published:Updated:

குடும்பத்தினர் 5 பேருக்கு விஷம் வைத்த சிறுமி! - காதலனை சிறைக்கு அனுப்பியதால் ஆவேசம்

கலிலுல்லா.ச

பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பெண் ஒருவர் உணவில் விஷத்தை கலந்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Representational image
Representational image

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்திலுள்ள மைனதார் காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியும் அதேபகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவரும் காதலித்துவந்தனர். 18 வயதுகூட ஆகாத சிறுமியின், காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும், சிறுமி தன் காதலில் உறுதியாகவே இருந்துள்ளார்.

23 வருடச் சிறைத்தண்டனை; கடிதத்தில் வளர்ந்த காதல் -  பீனிக்ஸ் பெண்ணின் காதல் கதை
Representational image
Representational image

இதனிடையே சிறுமியை காதலித்துவந்த அரவிந்த்குமார் மீது, சிறுமியின் பெற்றோர் புகார் ஒன்றையும் அளித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக, `சிறுமியை, அரவிந்த் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்' என்ற புகாரின் அடிப்படையில் சிறைவாசம் அனுபவித்தார் அரவிந்த்குமார். பின்னர், ஜாமீனில் வெளியேவந்தார். இத்தனை பிரச்னைகளுக்குமிடையே அவர்கள் இருவருக்கும் இடையிலான காதல் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. ஒருகட்டத்தில், அந்தச் சிறுமி, தனது குடும்பத்தினரை விஷம் வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.

அதன்படி, அம்மா, அப்பா, அண்ணன், 2 சகோதரிகள் என மொத்தம் 5 பேருக்கும் சாப்பாட்டில் விஷத்தை கலந்து வைத்துள்ளார். அவர்கள், விஷம் கலந்தது தெரியாமல், உணவைச் சாப்பிட்டதும் மயங்கி விழுந்துள்ளனர். இந்தச் சமயத்தை எதிர்பார்த்த அந்தச் சிறுமி, வீட்டிலிருந்து காதலனுடன் ஓடிவிட்டார்.

Representational image
Representational image

அப்போது, தற்செயலாக வீட்டுக்கு வந்த சிலர், மயங்கி விழுந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதில் 2 பேர் உடல்நலம் பெற்றுள்ளனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது தொடர்பாக சிறுமி மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.