Published:Updated:

காய்கறி வியாபாரியின் தராசை தண்டவாளத்தில் வீசிய போலீஸ்... ரயில் மோதி கால்களை இழந்த வியாபாரி!

ரயில்

உத்தரப்பிரதேசத்தில், காய்கறி வியாபாரியின் தராசை போலீஸ் அதிகாரியொருவர் தண்டவாளத்தில் வீசியதையடுத்து, வியாபாரி அதை எடுக்கச் சென்றபோது ரயில் மோதி கால்களை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காய்கறி வியாபாரியின் தராசை தண்டவாளத்தில் வீசிய போலீஸ்... ரயில் மோதி கால்களை இழந்த வியாபாரி!

உத்தரப்பிரதேசத்தில், காய்கறி வியாபாரியின் தராசை போலீஸ் அதிகாரியொருவர் தண்டவாளத்தில் வீசியதையடுத்து, வியாபாரி அதை எடுக்கச் சென்றபோது ரயில் மோதி கால்களை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
ரயில்

உத்தரப்பிரதேசத்தில், 18 வயது காய்கறி வியாபாரியின் தராசை போலீஸ் அதிகாரியொருவர் தண்டவாளத்தில் வீசியதையடுத்து, அதை எடுக்கச் சென்ற வியாபாரி ரயில் மோதி கால்களை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட காய்கறி வியாபாரி, கான்பூரின் கல்யாண்பூர் பகுதியிலுள்ள சாஹிப் நகரில் வசிக்கும் அர்சலன் என்று கூறப்படுகிது.

ரயில் தண்டவாளம்
ரயில் தண்டவாளம்

முன்னதாக கான்பூரிலுள்ள ஒரு ரயில் நிலையத்தின் ஜி.டி சாலையருகே காய்கறி விற்பனையாளர்கள் பெரும்பாலும் இடத்தை ஆக்கிரமித்திருப்பதாகக் கூறப்பட்டதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் வேலையில் போலீஸார் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில், நேற்று அர்சலன் அங்கு காய்கறி விற்றுக்கொண்டிருந்தபோது, இரண்டு போலீஸார் அங்கு வந்து வாக்குவாதம் செய்தனர். பின்னர் வந்திருந்த போலீஸாரில், தலைமைக் காவலர் ராகேஷ் அர்சலனின் தராசைத் தூக்கி ரயில் தண்டவாளத்தில் வீசியிருக்கிறார். அப்போது அர்சலன் அதை எடுக்கச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ரயில் மோதி பரிதாபமாகக் கால்களை இழந்தார். உடனடியாக போலீஸார் விரைந்து அவரை மீட்டுச்சென்றனர்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

இது குறித்துப் பேசிய மூத்த போலீஸ் அதிகாரி விஜய் துல், ``வெள்ளிக்கிழமையன்று ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, தலைமைக் காவலர் ராகேஷ் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டார். அப்போது அர்சலன் என்பவர் ரயிலில் அடிபட்டார். அதையடுத்து உடனடியாக ராகேஷ் குமார் இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பதிவுசெய்த வீடியோக்களை சேகரித்து, நாங்கள் விசாரணை நடத்திவருகிறோம்” எனத் தெரிவித்தார்.