Published:Updated:

`செலவுக்குப் பணம் கேட்டு கணவர் கொடுக்கவில்லை..’- 5 குழந்தைகளுக்குத் தாயால் நேர்ந்த துயரம்

கங்கை
கங்கை

ஜாகிரா எனும் கிராமத்தில் மிருதுல் அகா முன்னா, தனது மனைவி மஞ்சுவுடன் வசித்து வந்துள்ளார். வீட்டுச் செலவுகளைச் சமாளிக்கப் பணம் கேட்ட விவகாரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உலக அளவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வரும் பாதிப்பு மக்களைக் கலங்க வைத்துக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனுடன் ஏற்பட்ட பிரச்னையால் கங்கை ஆற்றில் தனது 5 குழந்தைகளையும் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜாகிரா எனும் கிராமத்தில் மிருதுல் அக்கா முன்னா தனது மனைவி மஞ்சுவுடன் வசித்து வந்துள்ளார். வீட்டுச் செலவுகளைச் சமாளிக்கப் பணம் கேட்ட விவகாரத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிறிது நேரத்தில் மஞ்சு தனது ஐந்து குழந்தைகளுடன் படோஹி மாவட்டத்தில் உள்ள ஜஹாகிரா காட் பகுதியில் கங்கை ஆறு ஓடிக்கொண்டிருக்கும் பகுதிக்குச் சென்றிருக்கிறார். அங்கு, தனது குழந்தைகள் 5 பேரையும் ஆற்றில் அவர் வீசியதாகக் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி காவல்துறை
உ.பி காவல்துறை

இதுதொடர்பாக காவல்துறையினர் தரப்பில்,``மிருதுல் அகா முன்னாவிற்கும் அவரது மனைவி மஞ்சுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் வீட்டுச் செலவிற்காக முன்னாவிடம், அவரது மனைவி பணம் கேட்டதன் காரணமாகத் தொடங்கியிருக்கிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், சிறிது நேரத்திற்குப் பின் தனது 5 குழந்தைகளை அழைத்துக்கொண்டு காட் பகுதிக்குச் சென்ற மஞ்சு, குழந்தைகளை ஆற்றில் வீசிவிட்டு அவரும் குதித்துள்ளார்.

இதில் 8 வயது, 3 வயது, 6 வயது,10 மற்றும் 12 வயதுடைய குழந்தைகள் 4 பேரும் ஆற்றில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. அதற்குப்பின் மனம் மாறிய தாய் மஞ்சு ஆற்றில் நீந்தி வந்து கரையேறியிருக்கிறார். பின்னர் தான் செய்த செயலை எண்ணித் துயரப்பட்டுக் கரையிலேயே உட்கார்ந்திருந்தார். வயலில் வேலை செய்து கொண்டிருந்த உள்ளூர்வாசிகள் சில பேர் இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவுடன் ஓடிவந்து குழந்தைகளைக் காப்பாற்ற முயன்றும் முடியாமல் போயுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியை அறிந்த மாவட்ட நீதிபதி படோஹி ராஜேந்திர பிரசாத் மற்றும் காவல்துறைக் கண்காணிப்பாளர் ரம்பதன் சிங் ஆகியோர் இரண்டு மீட்புக்குழுக்களுடன் சம்பவ இடத்திற்குச் சென்றனர். பின் ஆற்றில் குதித்துக் குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சியும் தோல்வியடைந்தது.

இறந்த பின் தூக்க மாத்திரைகளை திணித்த தாய்.. 3 ஆண்டுகளுக்குப் பின் வெளிவந்த கொலை!

விசாரணையில் மஞ்சு மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்று உள்ளூர்வாசிகள் சிலர் கூறினார்கள். ஆனால், இதற்கு மாறாக அவரது கணவரோ, ``என் மனைவி நல்ல மனநிலையில்தான் இருந்தார். ஆனால் ஏன் திடீரென இந்தக் கோரமான முடிவை எடுத்தார் என்பது எனக்குப் புரியவில்லை" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு