Published:Updated:

பாலியல் வன்கொடுமை: "நீதியின் மேல் நம்பிக்கையை இழந்துவிட்டேன்!"- குடியரசு தலைவருக்கு கடிதமெழுதிய பெண்

பாலியல் வன்கொடுமை (Representational Image) )

``நானும் போதுமான அளவு போராடிவிட்டேன். இனியும் எனக்கு நீதியும் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. எனவே, உங்கள் அனுமதியுடன் என்னுடைய வாழ்க்கையை முடிக்க விரும்புகிறேன்." - பாதிக்கப்பட்ட பெண்

பாலியல் வன்கொடுமை: "நீதியின் மேல் நம்பிக்கையை இழந்துவிட்டேன்!"- குடியரசு தலைவருக்கு கடிதமெழுதிய பெண்

``நானும் போதுமான அளவு போராடிவிட்டேன். இனியும் எனக்கு நீதியும் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. எனவே, உங்கள் அனுமதியுடன் என்னுடைய வாழ்க்கையை முடிக்க விரும்புகிறேன்." - பாதிக்கப்பட்ட பெண்

Published:Updated:
பாலியல் வன்கொடுமை (Representational Image) )

உத்தரப்பிரதேச மாநிலத்தில், வளர்ப்புமகன், கணவன், கணவனின் நண்பர்கள் ஆகியோரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 30 வயது பெண், கருணைக்கொலை மூலம் இறப்பதற்கு அனுமதிவேண்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி பாதிக்கப்பட்ட பெண், முதல் கணவருடன் விவாகரத்தான 3 ஆண்டுகளுக்குப் பிறகு, சண்டிகரில் 55 வயது விவசாயியைத் திருமணம் செய்திருக்கிறார். ஆனால் அங்கு, தன்னுடைய வளர்ப்புமகன், கணவன், கணவனின் நண்பர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக, பாதிக்கப்பட்ட பெண் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

பின்னர் இது குறித்து புரான்பூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் மீது எந்தவொரு நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்டப் பெண் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அதையடுத்து இந்த விவகாரத்தில், வழக்கு பதியுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் போலீஸ் தரப்பிலிருந்து அடுத்தகட்ட நடவடிக்கை எதுவும் எடுக்காததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டப் பெண், ``நீதியின் மீதான நம்பிக்கையை நான் இழந்துவிட்டேன். நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தபோதிலும் அக்டோபர் 9 அன்று புரான்பூர் கோட்வாலி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றம்சாட்டப்பட்ட எவரையும் போலீஸார் கைதுசெய்யவில்லை. அவர்கள் என்னைப் பேசாமல் இருக்குமாறு வற்புறுத்துகிறார்கள். மேலும், மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டுகிறார்கள்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை
சித்தரிப்புப் படம்

நானும் போதுமான அளவு போராடிவிட்டேன். இனியும் எனக்கு நீதி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. எனவே, உங்கள் அனுமதியுடன் என்னுடைய வாழ்க்கையை முடிக்க விரும்புகிறேன்" எனக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாகப் பெண்ணின் வளர்ப்புமகன் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவுசெய்திருப்பதாகக் கூறிய போலீஸ் அதிகாரி தினேஷ் குமார் பிரபு, ``இது பல அடுக்கு உண்மைகள் மற்றும் ஆதாரங்களைக் கொண்ட சிக்கலான வழக்கு. நியாயமான முறையில் விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார்.