Election bannerElection banner
Published:Updated:

உ.பி: தண்ணீர் கேட்டு வந்த சிறுமியை வன்கொடுமை செய்து கொன்று புதைத்த இளைஞர்!

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

தண்ணீர் தேடிச் சென்ற சிறுமி இரண்டு மணி நேரமாகியும் வராத சூழ்நிலையில் அவரின் குடும்பத்தினர் சிறுமியை தேடிச் சென்றிருக்கிறார்கள்.

தாகம் எடுப்பதாகத் தண்ணீர் கேட்டு வந்த சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொன்று புதைக்கப்பட்ட கொடூரச் சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷர் பகுதியில், 13 வயது சிறுமி, தனது தாய் மற்றும் சகோதரியுடன் பண்ணை ஒன்றில் வேலை செய்வதற்காகச் சென்றிருக்கிறார். அப்போது பணியின் இடையில் சிறுமிக்குத் தாகம் ஏற்படவே அருகிலிருந்த வீட்டுக்குச் சென்று தண்ணீர் கேட்டிருக்கிறார். அப்போது வீட்டில் தனியாக இருந்த 22 வயதான ஹரேந்திரா என்ற இளைஞர் அந்தச் சிறுமியிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றிருக்கிறார். சிறுமி தப்பிக்க முயலவே, சத்தமிட்டு ஊர் மக்களுக்குத் தெரியப்படுத்திவிடுவார் என்ற பயத்தில் அந்தச் சிறுமியைக் கொன்று, அவரின் வீட்டினுள்ளேயே புதைத்திருக்கிறார்.

பாலியல் தொந்தரவு
பாலியல் தொந்தரவு

தண்ணீர் தேடிச் சென்ற சிறுமி இரண்டு மணி நேரமாகியும் வராத சூழ்நிலையில் அவரின் குடும்பத்தினர் அவரைத் தேடிச் சென்றிருக்கிறார்கள். அப்போது அந்த இளைஞர் வீட்டிலும் சோதனையிட்டிருக்கிறார்கள். ஆனாலும் சிறுமி கிடைக்கவில்லை. அதன் பிறகு சிறுமியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஐந்து நாள்களுக்குப் பிறகு மறுபடியும் அந்த இளைஞரின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அந்த நபர் வீட்டில் இல்லை. அதனால் அவரது தந்தையும், அனுப்ஷார் காவல் நிலையத்தில் தன் மகனைக் காணவில்லை என்று புகார் அளித்திருக்கிறார். ஐந்து நாள்களாக அவரின் வீடு பூட்டப்பட்டிருப்பதாகப் புகாரில் தெரிவித்திருக்கிறார்.

மேலும், தொலைபேசி எண்ணைவைத்து காவல்துறையினர் விசாரித்ததில், அந்த இளைஞர் சிம்லாவுக்குத் தப்பிச் சென்றிருப்பதும், அவர்தான் அந்தச் சிறுமியைக் கொலை செய்திருக்கிறார் என்பதும் தெரியவந்திருக்கிறது. அதன் பிறகு காவல்துறையினர் அந்த இளைஞரைக் கைதுசெய்தனர். இது குறித்து அனுப்ஷார் காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில் ``நாங்கள் புகார் வந்த நாளிலிருந்து அந்தப் பகுதியைச் சோதனையிட்டுக்கொண்டிருந்தோம் அப்போது அந்த இளைஞரின் வீடு ஐந்து நாள்களாகப் பூட்டப்பட்டிருந்தது.’’

சென்னை: ரூ.10 லட்சம் கடனை வாங்கச் சென்ற ரெளடி; வழிமறித்த கும்பல்! - பழிக்குப் பழி கொலை கொடூரம்

இதனால் சந்தேகமடைந்த நாங்கள் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் எதையோ புதைத்ததற்கான தடயங்கள் இருந்தன. அதைத் தொடர்ந்து அந்த இடத்தைத் தோண்டி பார்த்ததில் நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் கொன்று புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். அதன் பிறகு சிம்லாவில் பதுங்கியிருந்த அந்த இளைஞனை உத்தரப்பிரதேசத்திலிருந்து தனிப்படையினரை அனுப்பிக் கைதுசெய்தோம்” என்றார்.

குற்றப் பதிவு ஆணையத்தின் அறிக்கையின் தகவல்படி உத்தரப்பிரதேசம், இந்தியாவில் பெண்கள் வாழ்வதற்குப் பாதுகாப்பற்ற மாநிலங்களில் முதல் இடத்தில் உள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு