Published:Updated:

உ.பி: தூங்கிக்கொண்டிருந்த கர்ப்பிணி மனைவியைச் சுட்டுக் கொன்ற காதல் கணவன் - போலீஸ் கைதுசெய்து விசாரணை

மனைவியைச் சுட்டுக் கொன்ற கணவன்

உத்தரப்பிரதேசத்தில், தன்னுடன் தூங்கிக்கொண்டிருந்த கர்ப்பிணி மனைவியைக் கணவன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தின், ஜெய்சிங்பூர் கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான ராஜ்குமார், தன் உறவினரான ரீட்டா தேவியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். ராஜ்குமாருக்கு இது இரண்டாவது திருமணமாகும். ஏற்கெனவே திருமணமான ராஜ்குமாருக்கு, நான்கு குழந்தைகள் இருக்கின்றன.

உத்தரப்பிரதேசம்-கர்ப்பிணி மனைவியைச் சுட்டுக்கொன்ற கணவன்
உத்தரப்பிரதேசம்-கர்ப்பிணி மனைவியைச் சுட்டுக்கொன்ற கணவன்
மாதிரி புகைப்படம்

ராஜ்குமாரும், ரீட்டா தேவியும், படன்பூர் கிராசிங் அருகே வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்திருக்கின்றனர். ரீட்டா தேவி கர்ப்பமாக இருந்திருக்கிறார். இந்த நிலையில்தான், ராஜ்குமார் நேற்றிரவு தன்னுடன் உறங்கிக்கொண்டிருந்த கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். இதில் ரீட்டா தேவி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். மேலும் ராஜ்குமார், ரீட்டா தேவியை எதற்காக சுட்டார் என்பதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போலீஸ் கைதுசெய்து விசாரணை
போலீஸ் கைதுசெய்து விசாரணை

இந்தச் சம்பவம் நடந்ததையடுத்து ரீட்டா தேவியின் சகோதரி சீதா தேவி, ராஜ்குமார்மீது போலீஸில் புகாரளித்திருக்கிறார். அதனடிப்படையில் போலீஸார் ராஜ்குமார்மீது வழக்கு பதிவுசெய்து அவரைக் கைதுசெய்தனர். இது குறித்து ஊடகங்களிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஆனந்த் சிங் பதவுரியா, ``ரீட்டா தேவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. கொலைக்கான காரணம் ஏதும் தெரியாததால் ராஜ்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது" என்று தெரிவித்தார்.