Published:Updated:

நெடுஞ்சாலையில் டீசல் திருட்டைத் தடுத்த பெட்ரோல் பம்ப் மேனேஜர் சுட்டுக்கொலை! - போலீஸ் விசாரணை

சுட்டுக்கொலை

நெடுஞ்சாலையில் சிலர், அங்கு நின்றுகொண்டிருந்த லாரியிலிருந்து டீசலை திருடிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதை அருகிலிருந்த பெட்ரோல் பம்ப்பின் மேனேஜர் சுஷில் குமார் என்பவர் கண்டிருக்கிறார்.

நெடுஞ்சாலையில் டீசல் திருட்டைத் தடுத்த பெட்ரோல் பம்ப் மேனேஜர் சுட்டுக்கொலை! - போலீஸ் விசாரணை

நெடுஞ்சாலையில் சிலர், அங்கு நின்றுகொண்டிருந்த லாரியிலிருந்து டீசலை திருடிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதை அருகிலிருந்த பெட்ரோல் பம்ப்பின் மேனேஜர் சுஷில் குமார் என்பவர் கண்டிருக்கிறார்.

Published:Updated:
சுட்டுக்கொலை

லக்னோ-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில், பட்டப்பகலில் பெட்ரோல் பம்ப் மேனேஜர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பரேலி பகுதி லக்னோ-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் சிலர், அங்கு நின்றுகொண்டிருந்த லாரியிலிருந்து டீசலை திருடிக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதை அருகிலிருந்த பெட்ரோல் பம்ப்பின் மேனேஜர் சுஷில் குமார் என்பவர் கண்டிருக்கிறார். அதையடுத்து சுஷில் குமார் சக ஊழியர்களுடன் சென்று டீசல் திருடிக்கொண்டிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு

அதில் ஆத்திரமடைந்த டீசல் திருடர்கள், சுஷில் குமாரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து காரில் தப்பித்துச் சென்றுவிட்டனர். இதில், சுஷில் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்துப் பேசிய பரேலி பகுதி எஸ்.பி ராஜ் குமார், ``சாலையில் நின்றுகொண்டிருந்த லாரியிலிருந்து சிலர் டீசல் திருடுவதை, பெட்ரோல் பம்ப் மேனேஜரும், அவரின் சக ஊழியரும் பார்த்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போலீஸ்
போலீஸ்

அப்போது டீசல் திருடுவதை நிறுத்துமாறு திருடர்களிடம் அவர்கள் சொன்னபோது, திருடர்கள் திடீரென அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் மேனேஜர் அங்கேயே இறந்துவிட்டார். மேனேஜரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும், குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்காக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவருகிறோம். அது மட்டுமல்லாமல், குற்றவாளிகளைப் பிடிப்பதெற்கென தனிக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.