Published:Updated:

உ.பி: கணவனைக் கட்டி போட்டு, மனைவி வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்! - 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

பாலியல் வன்கொடுமை

இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியரை 10 பேர்கொண்ட கும்பல் மிரட்டி அருகிலிருந்த மாந்தோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

உ.பி: கணவனைக் கட்டி போட்டு, மனைவி வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்! - 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியரை 10 பேர்கொண்ட கும்பல் மிரட்டி அருகிலிருந்த மாந்தோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

Published:Updated:
பாலியல் வன்கொடுமை

உத்தரப்பிரதேசம் முசாபர் நகரைச் சேர்ந்தவர் திஷா சாலியன். கடந்த புதன்கிழமை தன் மாமியார் வீட்டிலிருந்து மனைவியுடன் தனது கிராமத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது 10 பேர்கொண்ட குழு அவர்களை வழிமறித்ததாகக் கூறப்படுகிறது.

அவர்கள் தம்பதியரை மிரட்டி அருகில் இருந்த மாந்தோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கே கணவர் திஷா சாலியனை மாமரத்தில் கட்டிவைத்து, அவர் கண்முன்னாலேயே நான்கு பேர் மாறி மாறி அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

காவல்துறை
காவல்துறை

அதற்குப் பிறகு அங்கிருந்து உயிர் தப்பிய திஷா சாலியன் அவரின் மனைவியை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார். இதைத் தொடர்ந்து தனக்கு நடந்த கொடூரத்தை வியாழன் அன்று நியூ மண்டி காவல் நிலையத்தில் புகாராக அளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரி எஸ்.பி அர்பித் விஜயவர்கியா, "திஷா சாலியனின் புகாரின் அடிப்படையில் இரண்டு சிறார்கள் உட்பட குற்றம்சாட்டப்பட்ட 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளார், மேலும் அவரின் வாக்குமூலம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CRPC) பிரிவு 164 -ன் கீழ் நீதிபதி முன் பதிவுசெய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்துக்கு திஷா சாலியன் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.