Published:Updated:

உத்தரகாண்ட்: மருமகள் புகாரால் தற்கொலை செய்துகொண்ட காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்!

மரணம் ( சித்திரிப்புப் படம் )

காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஒருவர் தன் மருமகள் போலீஸில் புகார் அளித்ததால் தன்னைத் தானே சுட்டு, தற்கொலை செய்துகொண்டார்.

உத்தரகாண்ட்: மருமகள் புகாரால் தற்கொலை செய்துகொண்ட காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்!

காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஒருவர் தன் மருமகள் போலீஸில் புகார் அளித்ததால் தன்னைத் தானே சுட்டு, தற்கொலை செய்துகொண்டார்.

Published:Updated:
மரணம் ( சித்திரிப்புப் படம் )

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பகுகுணா. 59 வயதான இவர் 2004-2005 காலகட்டத்தில் அந்த மாநிலத்தில் என்.டி.திவாரி அரசில் இணை அமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர், சாலைவழி தொழிற்சங்கத் தலைவராகப் பணியாற்றிய இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஓய்வுபெற்றார். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை ராஜேந்திர பகுகுணா திடீரென தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய காவல் உயரதிகாரிகள், ``அரசியல்வாதியான ராஜேந்திர பகுகுணா, தன் பேத்தியை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மருமகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து அவர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

ராஜேந்திர பகுகுணா
ராஜேந்திர பகுகுணா
ட்விட்டர்

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை அவரது வீட்டிலிருந்து காவல் நிலையத்துக்குத் தொடர்புகொண்டு தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகத் தெரிவித்தார். உடனே காவல்துறை அவரது வீட்டுக்கு விரைந்தது. ஆனால் அவர் கையில் துப்பாக்கியுடன், `நான் குற்றமற்றவன், என் மருமகள் வீணாகப் பழி சொல்கிறாள்' எனக் கூறிக்கொண்டேயிருந்தார். அவரைத் தடுக்க ஒலிபெருக்கியில் பேசி சமாதானம் செய்ய முயன்றோம். ஆனால், அவர் பேசிக்கொண்டே தன் மார்பில் சுட்டுக்கொண்டு தொட்டியில் விழுந்துவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் மகன் அஜய் பகுகுணாவின் புகாரின் அடிப்படையில், அவர் மருமகள் ஆகியோரை தற்கொலைக்குத் தூண்டுதல் வழக்கில் கைதுசெய்திருக்கிறோம். விசாரணை நடைபெற்றுவருகிறது" எனத் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism