Published:Updated:

`900 கிலோ செம்மரம்; பணப் பங்கீடு மோதல்!’-வாணியம்பாடியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

செம்மரக் கடத்தலில் கிடைத்த பணத்தைப் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சாந்தபிரியா
சாந்தபிரியா

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன் (50). இவர், ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், `என் மனைவி மல்லிகா (48), மகன் சீனிவாசன் (28), மருமகள் சாந்தபிரியா (25), பேத்தி கோமதி ஆகியோர் ஒரே குடும்பமாக பூங்குளம் கிராமத்தில் வசித்துவருகிறோம். 

கைதுசெய்யப்பட்ட செம்மரக் கடத்தல் கும்பல்
கைதுசெய்யப்பட்ட செம்மரக் கடத்தல் கும்பல்

அதே பகுதியைச் சேர்ந்த பெரியண்ணன் மகன் கிருஷ்ணமூர்த்தி, கரியன் மகன் பழனி மற்றும் பூபதி மகன் பழனி, கட்டையன் மகன்கள் இளையராஜா, இளைய குமார், கோதண்டன் மகன் அசோகன் ஆகியோருக்கும் எனது மகனுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், என் வீட்டுக்குள் இரவு புகுந்த அந்தக் கும்பல், என்னையும் என் குடும்பத்தாரையும் கடுமையாகத் தாக்கியது. 

மேலும், எனது மருமகள் சாந்தபிரியாவின் கழுத்தை நெரித்து சுவரில் தலையை முட்டி கொடூரமாகக் கொலை செய்தனர். மேலும், என் மகன் சீனிவாசனையும் கடத்திச் சென்றுவிட்டனர். மகனை மீட்டுக் கொடுங்கள். மருமகளைக் கொன்ற அந்தக் கும்பல் மீது நடவடிக்கை எடுங்கள்' எனக் கூறியிருந்தார். இறந்துபோன பெண்ணின் தந்தையும் ஆலங்காயம் காவல் நிலையத்தில் இதே போன்ற புகாரைக் கொடுத்தார். 

மறியலில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள்
மறியலில் ஈடுபட்ட பெண்ணின் உறவினர்கள்

இளம்பெண் கொலை செய்யப்பட்டதை அறிந்த உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர், கொலையாளிகளைக் கைதுசெய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், திருப்பத்தூர்-ஆலங்காயம் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சம்பவ இடத்துக்கு வாணியம்பாடி டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அனைவரும் மறியலைக் கைவிட்டனர். 

Vikatan

இந்தச் சம்பவம் தொடர்பாக, புகாரில் கூறப்பட்டுள்ள நான்கு நபர்களைப் பிடித்து வந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், நாராயணனின் மகன் சீனிவாசனுடன் சேர்ந்து இந்தக் கும்பல் ஆந்திராவுக்குச் சென்று செம்மரம் வெட்டிக் கடத்தும் தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளனர். செம்மரங்களை விற்றதில் கிடைத்த பணத்தைப் பங்கு பிரித்ததில் சீனிவாசனே அதிக பணத்தை எடுத்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

``படம் பார்த்துட்டு எங்க அம்மா  கோபப்பட்டாங்க! ஏன்னா...'' - சேரன் #14YearsOfThavamaiThavamirundhu

இந்தத் தகராறில் ஆத்திரமடைந்த கூட்டாளிகள் சீனிவாசனின் குடும்பத்தைத் தாக்கியதும் அதில் அவரின் மனைவி  உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, ஒடுகத்தூர் அருகே இந்தக் கும்பல் பதுக்கிவைத்திருந்த 900 கிலோ செம்மரக் கட்டைகளையும் போலீஸார் கைப்பற்றினர். மேலும், இளம்பெண் கொலை தொடர்பாக செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (39), கரியன் மகன் பழனி (31), இளையராஜா (31) ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர். கடத்தப்பட்ட சீனிவாசனையும் மீட்டு விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், தப்பி ஓடிய மேலும் நான்கு பேரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.