Published:Updated:

`ஊரடங்கில் தனியாக மாட்டிய காய்கறி வியாபாரி..' - கொலையில் முடிந்த பிறந்தநாள் விழா முன்விரோதம்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கையொட்டி காய்கறிகளை வாகனத்தில் வைத்து தனியாக விற்ற வியாபாரியை ஒரு கும்பல் கொலை செய்துள்ளது.

திருவள்ளூரை அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் (25). ஊரடங்கையொட்டி வாகனத்தில் ஊர், ஊராக காய்கறிகளை விற்றுவந்தார். புன்னப்பாக்கம், மந்தவெளி தெருவில் காய்கறிகளை விற்க வாகனத்தில் தனியாக அசோக் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் இரண்டு பேர் வந்தனர். அவர்கள் இருவரும் அசோக்கிடம் தகராறு செய்தனர். அதனால் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

ஊரடங்கு முடிந்த பிறகுதான் வாகனங்கள் தரப்படும்... தமிழக டிஜிபி அலுவலகம் புதிய முடிவு!
அசோக்
அசோக்

இந்தச் சமயத்தில் இன்னொருவர் அங்கு வந்தார். அவரும் அசோக்கிடம் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த மூன்று பேரும் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாளால் அசோக்கை சரமாரியாக வெட்டினர். அதைப்பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அசோக், அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால், விடாமல் விரட்டிய அந்த மூன்று பேரும் அசோக்கை வெட்டியுள்ளனர். இதில் அவரின் கழுத்து, கை, தலை என பல இடங்களில் வெட்டுவிழுந்தன.

ரத்த வெள்ளத்தில் சரிந்த அசோக், உயிருக்குப் போராடினார். இதுகுறித்து புல்லரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், அசோக்கை மீட்ட அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அசோக் உயிரிழந்துவிட்டதாகக் கூறினர்.

`மதுபோதையில் மனைவி, மகனை வெட்டிய தந்தை; கொலை செய்த மகன்!' -சென்னையில் நடந்த கொடூரம் #Lockdown
சாலை மறியலில் ஈடுபட்ட அசோக் உறவினர்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட அசோக் உறவினர்கள்

அசோக், கொலை செய்யப்பட்ட தகவல் காட்டுத்தீ போல பரவியது. அதனால் அவரின் உறவினர்கள் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி கங்காதரன் மற்றும் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, கொலை செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸார் உறுதியளித்தனர். அதன்பிறகே அசோக்கின் உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதையடுத்து, புல்லரம்பாக்கம் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் அசோக் கொலை செய்யப்பட்டதற்கு முன்விரோதமே காரணம் எனத் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த அசோக்கிற்கும் அதே ஊரைச் சேர்ந்த சுதாகர், சுரேந்தர், சுரேஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

அசோக்கின் காய்கறி வாகனம்
அசோக்கின் காய்கறி வாகனம்
`டெல்லி சென்ற மகனுக்கு நெகட்டிவ்; 95 வயது தந்தை கொரோனாவால் மரணம்!’ - 189 குடும்பங்களுக்கு சீல்

கடந்த 2018-ல் சுதாகரின் பிறந்தநாள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது அசோக் மற்றும் அவரின் நண்பர்கள் சுதாகரை வெட்டியுள்ளனர். அதில் அவர், உயிர்பிழைத்துக்கொண்டார். இருப்பினும் அவரின் கை செயலிழந்த ஆத்திரத்தில் அசோக்கைத் தீர்த்துக்கட்ட சுதாகர் மற்றும் சுரேஷ், சுரேந்தர் திட்டமிட்டுள்ளனர். ஊரடங்கையொட்டி வாகனத்தின் மூலம் அசோக், காய்கறிகளை விற்றுவந்துள்ளார். உடனே சுதாகர் தலைமையில் சுரேந்தர், சுரேஷ் ஆகியோர் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அசோக்கை கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். அவர்கள் 3 பேரை தேடி வருகிறோம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு