Published:Updated:

வேலூர்: `மனைவியின் காதலன் வெட்டிக் கொலை!’ - ஓராண்டுக்குப் பிறகு பழிதீர்த்த இளைஞர்

கொலை செய்யப்பட்ட கோபி
கொலை செய்யப்பட்ட கோபி

ஓராண்டுக்குப் பின்னர், வேலூர் வந்த மனைவியின் காதலனை சரமாரியாக வெட்டிக் கொன்ற இளைஞரை போலீஸார் தேடிவருகிறார்கள்.

வேலூர், சலவன்பேட்டை கச்சேரி ஸ்கூல் தெருவைச் சேர்ந்தவர் கோபி (38). கார் ஓட்டுநர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (35) என்பவரின் மனைவி ரமணிக்கும் பழக்கம் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது. இருவருக்குமான நெருக்கம் அதிகமானதையடுத்து, ஓராண்டுக்கு முன்னர் கணவரைப் பிரிந்த ரமணி, காதலன் கோபியுடன் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

வேலூர்
வேலூர்

தற்சமயம், இருவரும் பெங்களூருவில் குடும்பம் நடத்திவந்ததாகவும் கூறப்படுகிறது. தனக்கு துரோகம் செய்த மனைவி ரமணிமீதும், அவரை அழைத்துச் சென்ற காதலன் கோபி மீதும் சரவணன் கொலைவெறியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று முன்தினம் பெங்களூரிலிருந்து வேலூருக்கு வந்திருக்கிறார் கோபி.

`சென்னை வழக்கறிஞர் கொலை!’ - வாணியம்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்த ரௌடி கும்பல்

இதையறிந்த சரவணன் அவரைத் தீர்த்துகட்ட முடிவு செய்திருக்கிறார். அதன்படி, அம்மனாங்குட்டை என்ற பகுதியில் நின்றிருந்த கோபியை நேற்று முன்தினம் இரவு சரவணன் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியதாகக் கூறப்படுகிறது. உறவினர்கள் கோபியை மீட்டு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.

கொலை செய்யப்பட்ட கோபி
கொலை செய்யப்பட்ட கோபி

சிகிச்சைப் பலனின்றி கோபி நேற்று மரணமடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, வேலூர் தெற்கு காவல் நிலைய போலீஸார், வழக்கு பதிவு செய்து சரவணனைத் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். கொலைக்கு உடந்தையாக மேலும் இரண்டு பேர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களைப் பிடிக்கவும் போலீஸார் தீவிரம்காட்டிவருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு