வேலூரை நடுங்கவைக்கும் பிரபல ரௌடிகளான ஜானி, வசூர் ராஜா இருவரும் மிரட்டிப் பணம் பறிப்பது குறித்து 5.7.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில் ‘குழந்தைகளைக் குறிவைக்கும் ஜானி... பணத்தைக் கறக்கும் காதல் மனைவி ஷாலினி... சிறையிலிருந்து மிரட்டும் வசூர் ராஜா... குலைநடுங்க வைக்கும் வேலூர் ரௌடிகள்!’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து, இரு ரௌடி களுக்குமான அரசியல் தொடர்புகளைப் பற்றி விசாரித்து எழுதும்படி வாசகர்களிடமிருந்து நமது அலுவலகத்துக்குக் கோரிக்கை வந்தது. அதைப் பற்றி விசாரிக்கக் களம் இறங்கியபோது கிடைத்த விவரங்கள் அனைத்தும் இன்னும் `திடுக்’ ரகம்!

வேலூரில் ரௌடிகளை வளர்த்துவிட்டதே ‘பால்கார் ரௌடி’ என்ற பட்டத்துக்குச் சொந்தமான ஜி.ஜி.ஆர் எனப்படும் ஜி.ஜி.ரவியின் குடும்பம்தான். அவர் 2017-ம் ஆண்டு காட்பாடியில் கொடூரமான முறையில் வெட்டிச் சாய்க்கப் பட்டார். அதுவரை அவர் அ.தி.மு.க-வில்தான் வலம்வந்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜி.ஜி.ரவி, ஆரம்பத்தில் பால் வியாபாரம் செய்திருக்கிறார். வருமானம் எதிர்பார்த்தபடி இல்லாத காரணத்தால், சந்தன மரக்கடத்தலில் இறங்கி அடுத்து மணல் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து என அடாவடி செய்து குறுகிய காலத்தில் உச்சத்தை எட்டிப்பிடித்தார்.

எதிர்பார்க்காத அளவுக்குப் பணம் சேர்ந்ததால் பிசினஸ்மேனாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் ஜி.ஜி.ரவி. அதேநேரம், தன்னால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து எதிரிகளும் அதிகமானதால், வாட்டசாட்டமான இளைஞர்களை குவார்ட்டருக்கும் பிரியாணிக்கும் அடிமையாக்கி கைக்குள் வைத்துக்கொண்டார். பயங்கரமான குற்றங்களில் தொடர்புடையவராகக் கருதப்படும் ஜி.ஜி.ரவியால் வளர்த்தெடுக்கப்பட்ட ரௌடிகளில் ஒருவர்தான் வசூர் ராஜா.

அரசியலில் ஐக்கியமான பிறகு, ‘பால்கார் ரௌடி’யின் ஆட்டம் ஆட்டம் அதிகமானது. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரைக் கட்டிவைத்துத் தாக்கிய வழக்கில் சிக்கினார். அந்த சம்பவம் நடந்த மாதங்களிலேயே ‘பால்கார் ரௌடி’ படுகொலை செய்யப்பட்டார். ‘கேங் மோதலில் கொல்லப்பட்டார்’ என்று போலீஸும் வழக்கை முடித்தது. பெரிய தலையைச் சாய்த்துவிட்டதாக மார்தட்டிக்கொண்டு தானாக முன்வந்து சரண்டர் ஆனது ஒரு ரௌடி கும்பல்.

வழிகாட்டிய குரு மறைந்துவிட்ட பிறகு, வசூர் ராஜா உள்ளிட்ட ரௌடிகள் தன்னிசையாகத் தலைதூக்கினர். ராஜாவுக்கு சமுதாயரீதியான செல்வாக்கும் இருக்கிறது. அவர் சார்ந்த சமுதாய மக்களே, வேலூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றனர். தவிர, சத்துவாச்சாரியிலுள்ள ஒரு குறிப்பிட்ட பகுதி இளைஞர்கள் ராஜாவுக்குத் தீவிர விசுவாசிகளாக இருக்கிறார்கள். ஓர் அரசியல் கட்சியில் தீவிர செயல்பாடுடைய அந்த இளைஞர்கள், கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

குடும்பச் சூழலை உணராத இளைஞர்கள், ‘வசூர் ராஜா பெயரைச் சொல்லி மிரட்டினால் பணமும் பொருளும் கிடைக்கின்றன’ என்ற ஆசையில் குற்றங்களைப் புரிகின்றனர். இப்படி ராஜாவிடம் சேர்ந்து தன்னுடைய ஆதிக்கத்தை காட்பாடியில் நிலைநிறுத்திய வர்தான் ரௌடி ஜானி. தன்மீது வழக்குகள் பாயாமல் இருப்பதற்காக, பெரும்பாலும் ராஜாவின் பெயரைப் பயன்படுத்தியே தொழிலதிபர்களிடம் பணம் பறிக்கிறார் ஜானி. இதனால், ஜானிமீதும் ராஜா கோபத்திலிருக்கிறார்.

செம்மரக் கடத்தலில் தமிழகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாளின் அக்காள் மகனைக் கடத்தி, கொலை செய்த வழக்கில்தான் ஜானி பிரபலமானார். அதுவரை சாதாரண ரௌடியாக இருந்த ஜானி, கேங்ஸ்டராக உருவெடுத்தார். எப்போதும் நீண்ட தலைமுடியுடன், புதரில் மறைந்திருக்கும் கரடியின் தோற்றத்தில் இருப்பதையே அவர் விரும்புகிறார். ‘ஜானி தலைமறைவாக இருக்கும் இடம் தெரியவில்லை’ என்று மூன்று ஆண்டுகளாகக் கதையளக்கும் காட்பாடி காக்கிகளை மக்களும் நம்பத் தயாராக இல்லை. ‘தமிழக-ஆந்திர எல்லை வனப்பகுதியில்தான் ஜானி பதுங்கியிருக்கிறார்’ என்று வெளிப்படையான தகவல்களும் உலவிக்கொண்டிருக்கின்றன.

ஆனாலும், ஜானியைத் தேடிப்பிடித்து கைது செய்யும் நோக்கத்தில் போலீஸ் இல்லை. அதற்கு பதிலாக நீதிமன்றத்தில் சரணடையவைக்க ஜானியின் வழக்கறிஞர்களிடம் கெஞ்சுகிறார்கள் காட்பாடி காக்கிகள். இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, வசூர் ராஜாவுக்கும் ஜானிக்கும் ஆஜராவதற்கு வழக்கறிஞர் கூட்டமே இருக்கிறது என்பதுதான்.

இரண்டு ரௌடிகளுமே ஒரு கட்டத்தில் ஏதாவது அரசியல் கட்சியில் இணைந்துவிட முயன்றனர். க்ரைம் ரேட் கூடியதால், அவர்களுக்கு அரசியல் வாய்ப்பு கூடிவரவில்லை. இருந்தாலும், தமிழகத்தைக் கடந்து ஆந்திரா, கர்நாடகாவிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களுடனும் ராஜாவுக்கும் ஜானிக்கும் தொடர்பிருக் கிறது. அதனால்தான், மூன்று மாநிலங்களிலுள்ள எந்தச் சிறையில் இருவரும் அடைக்கப்பட்டாலும், பெட் ரெஸ்ட் எடுப்பதைப்போல சொகுசாக இருக்கின்றனர்.

எது எப்படியோ... சாதாரண மக்களிடம் ‘கறார்’ காட்டும் காக்கிகள், சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் இது போன்ற ரௌடிகள்மீது மட்டும் கரிசனம் காட்டுவதுதான் மக்களிடம் அச்சத்தை மேலும் கூட்டுகிறது. சாத்தான்குளம் போலீஸின் சித்ரவதைச் சம்பவமே அதற்குச் சான்றாகவும் அமைந்திருக்கிறது!