Published:Updated:

வேலூர்: ``என்னைக் காதலிக்கலைன்னா கொன்னுடுவேன்!" - ஒன்பதாம் வகுப்பு மாணவியை மிரட்டிய இளைஞர் கைது

மாணவி

வேலூர் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்குக் காதல் தொல்லை கொடுத்துவந்த இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.

வேலூர்: ``என்னைக் காதலிக்கலைன்னா கொன்னுடுவேன்!" - ஒன்பதாம் வகுப்பு மாணவியை மிரட்டிய இளைஞர் கைது

வேலூர் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்குக் காதல் தொல்லை கொடுத்துவந்த இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
மாணவி

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 14 வயதாகும் சிறுமி, அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவருகிறார். 24-ம் தேதி, வடுகந்தாங்கல் பகுதியிலிருந்து விரிஞ்சிபுரம் மார்க்கமாகச் செல்லும் சாலையில், தனியார் நிறுவனம் அருகில் மாணவி தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கீழ்விலாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகனான 23 வயதாகும் இளைஞர் திருமலை, சிறுமியை வழிமறித்து காதலிப்பதாகக் கூறி வம்பிழுத்திருக்கிறார்.

வேலூர்
வேலூர்

சிறுமி அச்சப்பட்டு பேச மறுத்தபோது, ‘‘என்னைக் காதலிக்கலைன்னா கொன்னுடுவேன்’’ என இளைஞர் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தன் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். பெற்றோர் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அவர்களின் புகாரைப் பெற்றுக்கொண்ட எஸ்.ஐ பாஸ்கர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவுசெய்து, சிறுமிக்குக் காதல் தொல்லை கொடுத்த இளைஞர் திருமலையைக் கைதுசெய்து விசாரித்துவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கைது
கைது

சமீபகாலமாக, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீது தொடரும் பாலியல் வன்முறைகளால் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதும் குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism