Published:Updated:

`84 கொலைகள்; 30,815 வழக்குகள்!’ - வேலூருக்கு அதிர்ச்சி கொடுத்த 2019 குற்றப் பட்டியல்

வேலூர் மாவட்டத்தில், கடந்தாண்டு சிறப்பாகப் பணியாற்றிய 326 காவலர்களுக்கு ரூ.72,700 வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளது.

வேலூர் எஸ்.பி பிரவேஷ் குமார்
வேலூர் எஸ்.பி பிரவேஷ் குமார்

புதியதாகப் பிரித்து உருவாக்கப்பட்ட திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், 2019-ம் ஆண்டு முழுவதும் பதியப்பட்ட வழக்குகளையும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளையும் காவல்துறை பட்டியலிட்டுள்ளது.

அதன் விவரம்:-

கடந்தாண்டு முழுவதும் வேலூர் மாவட்டத்தில் 30,815 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 84 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்ட எஸ்.பி அலுவலகம்
வேலூர் மாவட்ட எஸ்.பி அலுவலகம்

அதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தவிர, 101 கொலை முயற்சி சம்பவங்களும் இரண்டு ஆதாயக் கொலைகளும் நடந்திருக்கின்றன. பெண்களுக்கு எதிராக 17 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அத்துடன் இளம் சிறார்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைப் புகாரில் போக்ஸோ சட்டத்தின்கீழ் 111 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Vikatan

எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டப் பிரிவில் 41 வழக்குகளும் கொலை வழக்கில் இறந்த 19 பேரின் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.25 லட்சம் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டுள்ளன. பாலியல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 15 பேருக்கு தீர்வு தொகையாக ரூ.27 லட்சம் வழங்கப்பட்டுள்ளன. 433 குற்ற வழக்குகளில் ரூ.4,27,89,488 மதிப்பிலான சொத்துகள் திருடு போயின. அவற்றில், 375 வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டறிந்து ரூ.2,90,94,795 மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.

கொலை
கொலை

குண்டர் தடுப்புக் காவலில் 52 ரௌடிகள், 16 மணல் கடத்தல்காரர்கள், 27 கொள்ளையர்கள், 33 சாராய வியாபாரிகள், 6 பாலியல் குற்றவாளிகள் என 134 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு 2,501 பழைய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 831 பேர் காணாமல் போனதாகக் கொடுக்கப்பட்ட புகாரில் 85 ஆண்கள், 331 பெண்கள், 43 ஆண் குழந்தைகள், 136 பெண் குழந்தைகள் என மொத்தம் 595 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

222 சூதாட்ட வழக்குகளும் கள்ளத்தனமாக குட்கா போன்ற புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 2,634 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
வேலூர் போலீஸ்

334 வாகன விபத்து வழக்குகள் பதிவாகியுள்ளன. 2018-ம் ஆண்டைவிட விபத்துகள் குறைவு. விபத்தில் உயிரிழந்த 511 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை பெற்றுத்தரப்பட்டுள்ளது. விபத்துகளைக் குறைக்கும் வகையில் 4,43,445 மோட்டார் வாகன வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அபராதத் தொகையாக ரூ.4,39,45,600 வசூலிக்கப்பட்டு அரசு கஜானாவில் சேர்க்கப்பட்டுள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய 4,704 பேர் மீது வழக்கு பதியப்பட்டு ரூ.11,76,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 9,989 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வேலூர் எஸ்.பி பிரவேஷ்குமார்
வேலூர் எஸ்.பி பிரவேஷ்குமார்

222 சூதாட்ட வழக்குகளும் கள்ளத்தனமாக குட்கா போன்ற புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 2,634 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. செம்மரக் கடத்தல் தொடர்பாக 4 வழக்குகள் பதியப்பட்டு 7 பேர் கைதுசெய்யப்பட்டனர். அத்திவரதர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 1,170 பேருக்குப் பதக்கங்களும் சான்றிதழும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. வேலூர் மாவட்டத்தில் நடந்த கொலை மற்றும் திருட்டு வழக்குகளைக் கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர்களுடன் சேர்ந்து சிறப்பாக பணியாற்றிய 326 காவலர்களுக்கு 72,700 ரூபாய் வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.