Published:Updated:

வேலூர்: ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை! - சுவரைத் துளையிட்டு மர்மநபர்கள் கைவரிசை

ஜோஸ் ஆலுக்காஸ்
News
ஜோஸ் ஆலுக்காஸ்

வேலூரில், ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் சுவரைத் துளையிட்டு மர்மநபர்கள் கொள்ளையடித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர், தோட்டப்பாளையம் பகுதியிலிருக்கும் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையை, வழக்கம்போல் நேற்றிரவு 10 மணியளவில் ஊழியர்கள் பூட்டிவிட்டுச் சென்றனர். இன்று காலை திறந்து பார்த்தபோது, கடையின் பின்பக்கச் சுவர் துளையிடப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து, வேலூர் வடக்கு போலீஸாருக்கு உடனடியாகத் தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து துளையைப் பார்வையிட்டு, சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துவருகிறார்கள். மோப்ப நாய்கொண்டும் கொள்ளையர்கள் வந்து சென்ற பாதையை ஆய்வு செய்கிறார்கள். வேலூர் சரக டி.ஐ.ஜி ஏ.ஜி.பாபு, எஸ்.பி ராஜேஷ்கண்ணன் ஆகியோரும் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.

ஜோஸ் ஆலுக்காஸ்
ஜோஸ் ஆலுக்காஸ்

ஒரு ஆள் நுழையக்கூடிய அளவுக்குத் துளை போடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள், தரைத்தளத்திலும் முதல் தளத்திலும் இருந்த நகைகளை அள்ளிச் சென்றதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இரவுநேரக் காவலர்களும் பணியில் இருந்ததால், நள்ளிரவு 12 மணியிலிருந்து அதிகாலைக்குள் இந்தத் திருட்டு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எவ்வளவு நகைகள் திருட்டுப்போயிருக்கின்றன என்பது குறித்து நகைக்கடை அதிகாரப் பொறுப்பிலுள்ளவர்கள் மேற்பார்வையில் கணக்கிடப்பட்டுவருகிறது. எஞ்சிய நகைகளைக் கணக்கிட்ட பின்னரே, கொள்ளைபோன நகைகளின் மதிப்பு குறித்துத் தெரியவரும் என்கிறது போலீஸ். வேலூரில், சமீபகாலமாக வழிப்பறி, செயின் பறிப்பு, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பது பொதுமக்களை அச்சமடையச் செய்திருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz