Published:Updated:

‘கட்டுக்கட்டாக சிக்கிய பணம்; வேலூர் ஆர்.டி.ஓ. மீது வழக்குப்பதிவு!’ -புரோக்கர்களுக்கு கடிவாளம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ( ச.வெங்கடேசன் )

வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியதைத் தொடர்ந்து, ஆர்.டி.ஓ. உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சத்துவாச்சாரியில் செயல்பட்டுவருகிறது. இங்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கும், வாகன எண் பதிவுசெய்வதற்கும் லஞ்சம் கேட்பதாகவும், புரோக்கர்களுடன் அதிகாரிகள் கூட்டு சேர்ந்து செயல்பட்டுவருவதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு அடுக்கடுக்காக புகார்கள் குவிந்தன.

வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
ச.வெங்கடேசன்

இதையடுத்து, நேற்று முன்தினம் டி.எஸ்.பி சரவணக்குமார் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் திடீரென வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நுழைந்து அதிரடியாகச் சோதனை நடத்தினர்.

இதில், கணக்கில் வராத ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 780 ரூபாய் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்பட பல்வேறு சான்றுகள் பெற வந்திருந்தவர்களிடமிருந்து 60 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

‘‘மூன்று நாள்களுக்கு மேலாக ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் நடவடிக்கைகளை ரகசியமாக கவனித்துவந்தோம்.’’
‘திடீர் ரெய்டு’ குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்...

இதுதொடர்பாக ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் (கிரேடு-1) ராஜசேகர், (கிரேடு-2) ஞானவேல், அலுவலக உதவியாளர் முரளி ஆகிய நான்கு பேர் மீது ஊழல் தடுப்பு பிரிவு (7) உள்படப் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், 8-க்கும் அதிகமான புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்திருக்கிறார்கள்.

வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
ச.வெங்கடேசன்

புரோக்கர்களின் பெயர்களை பட்டியலிட்டு விசாரணை வளைத்துக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கையால் வேலூர் ஆர்.டி.ஓ. அலுவலகம் பரபரப்பாக காணப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு