Published:Updated:

திருப்பத்தூர்: 44 வழக்குகள்... 2006 முதல் தலைமறைவு - போலீஸில் சரணடைந்த பெண் மாவோயிஸ்ட் பின்னணி!

மாவோயிஸ்ட்  பிரபா
News
மாவோயிஸ்ட் பிரபா

இவர் கர்நாடக மாநிலம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், மாவோயிஸ்ட் அமைப்புக்காகப் பல ஆண்டுகளாகத் தீவிரமாக பணியாற்றியிருக்கிறார். மாது, நேத்ரா, விண்டு என பல பெயர்களில் வலம்வந்திருக்கிறார்.

கர்நாடக மாநிலம், சிமோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரபா என்கிற சந்தியா. 45 வயதான இந்தப் பெண், மாவோயிஸ்ட் அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினர். இவர், கர்நாடக மாநிலம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், மாவோயிஸ்ட் அமைப்புக்காகப் பல ஆண்டுகளாகத் தீவிரமாக பணியாற்றியிருக்கிறார். மாது, நேத்ரா, விண்டு என பல பெயர்களிலும் வலம்வந்திருக்கிறார். 2006-ம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்துவந்த பிரபா மீது கர்நாடகாவில் மட்டும் 44 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

மாவோயிஸ்ட் பிரபாவுடன் டி.ஐ.ஜி ஏ.ஜி.பாபு, எஸ்.பி பாலகிருஷ்ணன்
மாவோயிஸ்ட் பிரபாவுடன் டி.ஐ.ஜி ஏ.ஜி.பாபு, எஸ்.பி பாலகிருஷ்ணன்

பிரபாவின் தலைக்கு அந்த மாநில அரசு 5 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவித்திருந்தது. மாவோயிஸ்ட் இயக்கத்தில் முக்கியப் பொறுப்பிலிருந்த பிரபாவின் கணவர் பி.ஜி.கிருஷ்ணமூர்த்தி மீதும் 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கின்றன. அவரை, கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி, கேரள போலீஸார் கைதுசெய்து சிறையிலடைத்தனர். இந்த நிலையில், பிரபா மாவோயிஸ்ட் அமைப்பிலிருந்து முழுமையாக வெளியேறி, பொதுச் சமுதாயத்துடன் இணைந்து அமைதியான முறையில் வாழ விரும்புவதாக திருப்பத்தூர் மாவட்ட க்யூ பிரிவு போலீஸாரிடம் தெரிவித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதையடுத்து, திருப்பத்தூர் எஸ்.பி பாலகிருஷ்ணன் முன்பு நேற்று சரணடைந்தார். இந்தத் தகவலை வேலூர் சரக டி.ஐ.ஜி ஏ.ஜி.பாபு, வேலூரில் நிருபர்களிடம் கூறினார். அப்போது, மாவோயிஸ்ட் பிரபாவும் அருகில் அமரவைக்கப்பட்டிருந்தார். டி.ஐ.ஜி ஏ.ஜி.பாபு கூறுகையில், ``சரணடைந்த பிரபா, வேலூரிலிருக்கும் அரசு பிற்காப்பு இல்லத்தில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

மாவோயிஸ்ட்  பிரபா
மாவோயிஸ்ட் பிரபா

அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளும் செய்து கொடுக்கப்படும். தமிழக அரசின் சரணடைதல் மற்றும் புனரமைப்புக் கொள்கை அடிப்படையில் பிரபாவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு மாத உதவித்தொகையாக 4,000 ரூபாய் வழங்கப்படும். கர்நாடக மாநிலத்தில் இவர்மீது பல்வேறு வழக்குகள் இருந்தாலும், அந்த மாநில காவல்துறையினரிடம் இவர் ஒப்படைக்கப்பட மாட்டார். ஆனால், இவர் அங்கிருக்கும் வழக்குகளை எதிர்கொள்ளவேண்டி வரும்’’ என்றார்.