Published:Updated:

வேலூர்: `என் குடும்பத்தினரை அலைக்கழிக்க வேண்டாம்!’ - கடிதம் எழுதிவிட்டு கிணற்றில் குதித்த இளைஞர்

யுவராஜ்
News
யுவராஜ்

``என் இந்த முடிவுக்கு அதீத மன அழுத்தமே காரணம். வேறு யாரும் இல்லை. என் குடும்பத்தினரை அலைக்கழிக்க வேண்டாம். Sorry for all’’ என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகேயுள்ள பாலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது 30 வயது மகன் யுவராஜ், இன்ஜினீயரிங் படித்துவிட்டு சென்னையிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்துவந்தார். இவருக்குத் திருமணமாகி, ஒன்பது மாதங்கள்தான் ஆகின்றன. சமீபத்தில், இவரின் தாத்தா உடல்நலக் குறைவால் மரணமடைந்தார். இதனால், ஊருக்கு வந்திருந்த யுவராஜ், தொடர்ந்து மன உளைச்சலுடன் காணப்பட்டிருக்கிறார்.

கடிதம்
கடிதம்

இந்த நிலையில், நேற்று காலை வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாலை வரை வீடு திரும்பவில்லை. மாலை 5 மணியளவில், குருவராஜபாளையம் கிராமத்திலுள்ள ஒரு கிணற்றின் அருகில் யுவராஜின் செருப்பும், கடிதம் ஒன்றும் கிடந்தன. அதில், ``என் இந்த முடிவுக்கு என் அதீத மன அழுத்தமே காரணம். வேறு யாரும் இல்லை. என் குடும்பத்தினரை அலைக்கழிக்க வேண்டாம். Sorry for all’’ என எழுதப்பட்டிருந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது குறித்து, அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கிடைக்கவே, அவர்கள் பதறியடித்துக்கொண்டு கிணற்றுப் பகுதிக்கு ஓடி வந்தனர். உடனடியாக, ஒடுகத்தூர் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கித் தேடினர்.

யுவராஜ்
யுவராஜ்

ஒரு மணி நேர தேடுதலுக்குப் பிறகு, இடுப்பில் கல்லைக் கட்டியிருந்த நிலையில் யுவராஜை சடலமாக மீட்டனர். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் உடல் அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து, வழக்கு பதிவு செய்த வேப்பங்குப்பம் போலீஸார், தற்கொலைக்கான காரணம் குறித்துத் தீவிரமாக விசாரித்துவருகிறார்கள்.