Published:Updated:

`நாடகம்.. பாலியல் வன்கொடுமை.. டார்ச்சர்'- ஹைதராபாத் பெண் மருத்துவர் மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி
பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி

அவருடைய ஸ்கார்ப் மற்றும் விநாயகர் படம் பதித்த தங்கச் சங்கிலியை வைத்து, இறந்தது பிரியங்காதான் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா ரெட்டி, கொல்லப்பூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிவந்தார். ஷாம்ஷாபாத் பகுதியில் இவரது வீடு அமைந்துள்ளது. இங்கிருந்து தினமும் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். நேற்று மாலை, வழக்கம்போல் பணிமுடிந்து திரும்பி வரும் வழியில், இவரது இருசக்கர வாகனம் பஞ்சராகியுள்ளது. லாரி ஓட்டுநர் ஒருவர், பஞ்சர் ஒட்டித் தர உதவிசெய்ய முன்வந்துள்ளார். இந்தத் தகவலை தன் குடும்பத்தினருக்கு போன்மூலம் தெரிவித்தார்.

`நாடகம்.. பாலியல் வன்கொடுமை.. டார்ச்சர்'- ஹைதராபாத் பெண் மருத்துவர் மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

இரவு 9 மணிக்கு, தன் சகோதரிக்கு மீண்டும் தொடர்புகொண்டவர், “ பைக் பஞ்சர் ஆச்சு... எனக்கு பதற்றமா இருக்கு டோல்கேட் பக்கத்துலதான் இருக்கேன். நீ கொஞ்ச நேரம் பேசிக்கிட்டே இரு” எனக் கூறியுள்ளார். பஞ்சரான பைக்குடன் அங்கு தவித்துள்ளார். சிறிது நேரத்தில், அவரது மொபைல் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனது. அதன்பின்னர், அந்த போன் ஆன் செய்யப்படவேயில்லை. அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், அவர் கூறிய டோல்கேட் பகுதிக்கு விரைந்துள்ளனர். ஆனால், அப்போது அவர் அங்கில்லை. இதனால் பதற்றமடைந்தவர்கள், காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரித்துவந்தனர்.

`பைக் பஞ்சர்... ஸ்விட்ச் ஆஃப் ஆன போன்'- ஹைதராபாத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் மருத்துவர்!

ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைத்துள்ள ஷாத்நகர் பகுதியில் பாலத்துக்குக் கீழே இளம்பெண்ணின் சடலம் இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. அதிகாலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி ஒருவர், இளம்பெண் ஒருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டார். உடனடியாக காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, அந்தப் பகுதியில் காணாமல்போன பெண்களின் விவரத்தை சேகரித்தனர். அதன்படி, பிரியங்கா குடும்பத்துக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த பிரியங்காவின் சகோதரி, சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது தன் சகோதரிதான் என உறுதிசெய்தார். அவரது உடல், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவருடைய ஸ்கார்ப் மற்றும் விநாயகர் படம் பதித்த தங்கச் சங்கிலியை வைத்து, இறந்தது பிரியங்காதான் எனக் கண்டுபிடிக்கப்பட்டது.

முகமது பாஷா
முகமது பாஷா

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் #JUSTICEFORPRIYANKA என்ற ஹேஸ்டேக்கை சிலர் உருவாக்கியுள்ளனர். ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் அமித் ஷா போன்ற முக்கிய நபர்களை டேக் செய்தும் வருகிறார்கள். `இந்தக் கொடூர கொலையைச் செய்த குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்றும் கண்டதும் சுட உத்தரவிட வேண்டும் என்றும் கொதித்துப் பதிவிட்டு வருகிறனர். இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக நான்கு பேரை அதிரடியாக கைது செய்தது போலீஸ். நாராயன்பேட்டை மாவட்ட ஜக்லரைச் சேர்ந்த லாரி டிரைவர் முகமது பாஷா, நவீன், க்ளீனர்கள் கேசவலு, சிவா ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரியங்கா ரெட்டி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என்பதை தற்போது போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளனர்.

`எங்களை மன்னித்துவிடு சிஸ்டர்!’- பெண் மருத்துவர் மரணத்தால் கொதிக்கும் மக்கள் #JusticeForPriyanka

லாரியின் நம்பர் சிசிடிவியில் சிக்கியதை வைத்து இவர்களை கைது செய்துள்ளனர். இதற்கிடையே, பிரேத பரிசோதனை அறிக்கையும் மருத்துவர் பிரியங்கா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்ததை உறுதி செய்துள்ளது எனக் தெலங்கானா ஊடகங்கள் கூறுகின்றன. கொலை செய்வதற்கு முன்பு பிரியங்காவை அதிக டார்ச்சர் செய்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. கழுத்தை நெறிக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டதற்கான அடையாளம், தலையில் பலத்த காயங்கள் இருந்தன என பிரியங்காவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இது ஒரு திட்டமிடப்பட்ட கற்பழிப்பு மற்றும் கொலை என்று கூறப்படுகிறது. அதற்கு காரணம் லாரி டிரைவர் மற்றும் அவரின் உதவியாளர்களின் நடவடிக்கைகள்தான்.

`நாடகம்.. பாலியல் வன்கொடுமை.. டார்ச்சர்'- ஹைதராபாத் பெண் மருத்துவர் மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

பிரியங்கா வெகுநேரமாக அங்கு இருப்பதை டோல்-பிளாசாவில் நின்றுகொண்டிருப்பதை கண்காணித்துக்கொண்டிருந்த குற்றவாளிகள், தொடர்ந்து அவர் என்ன செய்கிறார் என்பதை உன்னிப்பாக கவனித்த வண்ணம் இருந்துள்ளனர். இந்தக் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. பின்னர் அவருக்கு உதவுவது போல் அவர்கள் நடித்து ஸ்கூட்டர் டயரில் காற்றை அகற்றும் நோக்கத்துடன் செயல்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஷம்ஷாபாத் டிஜிபி பிரகாஷ் ரெட்டி தலைமையில் 15 பேர் கொண்ட போலீஸ் டீம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது. டோல் கேட் அருகே சி.சி.டி.வி காட்சிகளையும் ஹைதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு இடையேவும் சில ஆதாரங்களை கைப்பற்றியுள்ளனர். சேகரிக்கப்பட்ட இரண்டு வீடியோக்களில் பிரியங்கா தனியாக டோல் கேட்டை நோக்கி செல்வதும், மற்றொன்றில் அவர் அடையாளம் தெரியாத நபருடன் பேசுவதும் பதிவாகியுள்ளது.

டோல் பிளாசாவிலிருந்து சிறிது தூரத்தில் பிரியங்காவின் உடைகள், செருப்பு மற்றும் மதுபான பாட்டில்களையும் போலீஸார் மீட்டுள்ளனர். இந்த ஆதாரங்களை வைத்து லாரியில் வைத்தே பிரியங்கா பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர். எனினும் கைது செய்யப்பட்ட நால்வரையும் தற்போது தனியான இடத்தில் வைத்து விசாரித்தது வருகின்றனர். அவர்கள் தெரிவிக்கும் வாக்குமூலத்தை பொறுத்தே பிரியங்காவுக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியவரும் என்கின்றனர் போலீஸார்!

அடுத்த கட்டுரைக்கு