Published:Updated:

இளைஞரைக் கொடூரமாகத் தாக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்! – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

இன்ஸ்பெக்டர் தாக்குதல் | வைரல் வீடியோ

சீருடையின்றி மது போதையில் இருக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் இளைஞர் ஒருவரை கொடூரமாக தாக்கும் வைரல் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இளைஞரைக் கொடூரமாகத் தாக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்! – வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

சீருடையின்றி மது போதையில் இருக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் இளைஞர் ஒருவரை கொடூரமாக தாக்கும் வைரல் வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
இன்ஸ்பெக்டர் தாக்குதல் | வைரல் வீடியோ

’சின்னசேலம் அருகே லஞ்சம் வாங்கியதை சுட்டிக்காட்டிய நபர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல் அதிகாரி’ என்ற பின்னணி குரலுடன் வீடியோ காட்சி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரவு நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோவில், டி-ஷர்ட் அணிந்திருக்கும் ஒரு நபர், இளைஞர் ஒருவரைக் கொடூரமாகத் தாக்குகிறார்.

அதற்கு, ``எதற்காக என்னை அடிக்கிறீர்கள்?” என்று அந்த இளைஞர் கேட்க, மறுபடியும் அவரை கொடூரமாகத் தாக்கி கீழே உட்கார வைக்கிறார். அதன்பிறகும் அவரைத் தொடர்ந்து தாக்கியதால் தன் மகனை விட்டுவிடும்படி கெஞ்சுகிறார் அந்த இளைஞரின் தாய். அதற்கு ’ஓடுடி நாயே..’ என்கிறார் டி-ஷர்ட் அணிந்திருக்கும் நபர்.

பாமக ஒன்றியச் செயலாளர் சக்திவேல்
பாமக ஒன்றியச் செயலாளர் சக்திவேல்

கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திவரும் அந்த வீடியோ காட்சியின் பின்னணியை ஆய்வு செய்தோம். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சுதாகர், கடந்த 2020-ம் ஆண்டு வி.சி.க-வை சாதி பெயர் சொல்லி திட்டியதாக பா.ம.கவைச் சேர்ந்த இருவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனைத் தொடர்ந்து 2020 ஏப்ரல் 10-ம் தேதி சின்னசேலம் பா.ம.க-வின் வடக்கு ஒன்றியச் செயலாளர் சக்திவேல் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட கண்டன வீடியோ பதிவில், “சின்னசேலம் வடக்கு ஒன்றியம் பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்களைப் பொய் வழக்குகள் மூலமாக இனி தொட வேண்டும் என்று நினைத்தால், பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றியச் செயலாளராக என் கட்சியின் தொண்டர்களுக்கும் என் சமுதாய மக்களுக்காகவும் என் உயிரை விடவும் தயங்க மாட்டேன்.

என்பதை சின்னசேலம் காவல்துறை ஆய்வாளர் சுகாதர் அவர்களுக்கு எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டார். அதில் கோபமடைந்த இன்ஸ்பெக்டர் சுதாகர், தனது காவல் எல்லைக்கு உட்பட்ட மூங்கில்பாடி கிராமத்திற்குள் மதுபோதையில் இரவு நேரத்தில் சென்று, அங்குள்ள சக்திவேல் வீட்டிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. சக்திவேலின் பெற்றோர் பதறிப்போய், இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சித் தடுக்க, அவர்களையும் ஒருமையில் திட்டி, தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ அப்போது சமூக வலைதளங்களில் வைரலானதால் ஆயுதப்படைக்கு இன்ஸ்பெக்டர் சுகாதர் மாற்றப்பட்டார். அந்த வீடியோதான் தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism