Published:Updated:

தொடர் லஞ்சப் புகார்... தோகைமலை மின்பொறியாளர் அலுவலகத்தைக் குறிவைத்த விஜிலென்ஸ்!

விஜிலென்ஸ் டி.எஸ்.பி வந்த வாகனம்
விஜிலென்ஸ் டி.எஸ்.பி வந்த வாகனம் ( நா.ராஜமுருகன் )

தோகைமலை உதவி மின்பொறியாளர் அலுவலகத்தின் மீது தொடர்ச்சியாக வந்த புகார்களைத் தொடர்ந்து, மின்வாரிய விஜிலென்ஸ் போலீஸ் டி.எஸ்.பி லஞ்ச புகார்கள் எதிரொலியாக விசாரணை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள நாகனூர், பாதிரிப்பட்டி, பொருந்தலூர், கழுகூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் புதிய மின் இணைப்பு பெறுதல், மின் இணைப்பு மாற்றம் செய்தல் விஷயமாக மக்கள் அணுகும்போது, அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகப் புகார் எழுந்தது.

'மின் இணைப்பு விஷயங்களுக்காக மக்கள் அதுசம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் மின்வாரியம் லைசென்ஸ் பெற்ற கான்ட்ராக்டர்கள் விண்ணப்பங்கள் பெறவும், மின் இணைப்பு பெற்றுத்தரவும் அய்யர்மலை, குளித்தலை மின்வாரிய உயர் அதிகாரிகளுக்குப் பணம் கொடுக்க வேண்டும்' எனப் பொதுமக்கள் சார்பில் திருச்சி மின்வாரிய விஜிலென்ஸ் போலீஸார் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

விஜிலென்ஸ் டி.எஸ்.பி வந்த வாகனம்
விஜிலென்ஸ் டி.எஸ்.பி வந்த வாகனம்
நா.ராஜமுருகன்

லஞ்சம் வாங்கப்படுவதாக விஜிலென்ஸ் போலீஸாருக்குத் தொடர் புகார் போகவும், இதன் பேரில் தோகைமலை மின் பொறியாளர் அலுவலக ஊழியர்களை, திருச்சி மின்வாரிய விஜிலென்ஸ் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் தொடர்ச்சியாகத் தோகைமலை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில், திருச்சி மின்வாரிய விஜிலென்ஸ் போலீஸ் டி.எஸ்.பி தலைமையிலான போலீஸார், அலுவலர்கள், லைசென்ஸ் பெற்ற கான்ட்ராக்டர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின்போது, தோகைமலை உதவி மின் பொறியாளர் சக்திவேல் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

விபத்துக்குள்ளான இனோவா கார்; ரூ.15,000 லஞ்சம் கேட்ட தலைமைக் காவலர்!- வசமாக மாட்டிவிட்ட இளைஞர்

இந்த நிலையில் நம்மிடம் பேசிய சிலர், ``மின் இணைப்பு கொடுப்பதற்காக அதிகாரிகளும், அனுமதி பெற்ற கான்ட்ராக்டர்களும் மக்களிடம் கடுமையாக லஞ்சம் வாங்கியதாகச் சென்ற தொடர் புகார்களைத் தொடர்ந்து இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டி.எஸ்.பி ஒருவர் தலைமையிலான முதல்கட்ட விசாரணையிலேயே, பல லட்ச ரூபாய்களை மின் இணைப்புக் கொடுக்க லஞ்சமாக வாங்கியதாக விஜிலென்ஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதனால், தொடர் விசாரணையை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

விஜிலென்ஸ் டி.எஸ்.பி வந்த வாகனம்
விஜிலென்ஸ் டி.எஸ்.பி வந்த வாகனம்
நா.ராஜமுருகன்

எந்தவித கட்டுப்பாடும் பயமும் இல்லாமல் அதிகாரிகள் லஞ்சம் வாங்கி வந்தனர். அதனால், பூனைக்கு யார் மணி கட்டுவது என்று தெரியாமல் மக்கள் அல்லல்பட்டு வந்தனர். ஆனால், தொடர்ச்சியாக அனுப்பப்பட்ட புகார்களின் மூலம், இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனியாவது இங்கே லஞ்சம் வாங்கப்படுவது குறையும் என்று நம்புகிறோம்" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு