Published:Updated:

மதுரை: லஞ்சம் வாங்கிய வழக்கு; லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிக்குச் சிறை! - நீதிமன்றம் அதிரடி

மதுரை மாவட்ட நீதிமன்றம்
மதுரை மாவட்ட நீதிமன்றம்

ஆய்வாளர் பெருமாள் பாண்டியன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, நேற்று இவ்வழக்கில் அவருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மதுரை தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளைப் பொறிவைத்துப் பிடிக்க உருவாக்கப்பட்டதுதான் லஞ்ச ஒழிப்புத்துறை. அப்படிப்பட்ட துறையில் நேர்மையாக இருக்க வேண்டிய அதிகாரியே லஞ்சம் வாங்கினால், அதன் நோக்கமே அர்த்தமில்லாமல் போகும்.

லஞ்சம்
லஞ்சம்

அப்படி நேர்மை தவறிய அதிகாரி ஒருவர் சிறைத் தண்டனை பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் 2010-ம் ஆண்டில் ஆய்வாளராகப் பணியாற்றியவர் பெருமாள் பாண்டியன்.

மதுரை மாவட்ட நீதிமன்றம்
மதுரை மாவட்ட நீதிமன்றம்

அவர் பணியாற்றிய காலகட்டத்தில், மதுரை அரசு மருத்துவர் அசோக்குமார் மீது அரசு அனுமதி இல்லாமல் வீடு வாங்கிய புகாரை விசாரித்திருக்கிறார் ஆய்வாளர் பெருமாள் பாண்டியன், அப்போது அவர் மீது நடவடிக்கை எடுக்காமலிருக்க 7 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டிருக்கிறார்.

இந்தப் புகாரைவைத்து கையும் களவுமாகப் பிடித்த அப்போதைய ஊழல் கண்காணிப்பு துணைக் கண்காணிப்பாளர் இராம.அம்பிகாபதி வழக்கு பதிவு செய்து, பெருமாள் பாண்டியனைக் கைதுசெய்தார். அந்த வழக்கு, மதுரை ஊழல் வழக்குகளுக்கான தனி நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

லஞ்சம்
லஞ்சம்

ஆய்வாளர் பெருமாள் பாண்டியன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, நேற்று அந்த வழக்கில் அவருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மதுரை தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஊழல் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் ஒருவர், ஊழல் தடுப்புப் பிரிவினராலேயே கைதுசெய்யப்பட்டு சிறைத் தண்டனை பெறுவது தமிழ் நாட்டில் இதுவே முதன்முறை. வேலியே பயிரை மேய்ந்தாலும், அதற்கு தண்டனை உண்டு என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு