Published:Updated:

`இரண்டு ரகசிய லாக்கர்கள்... 10 வங்கிகளில் கணக்கு' - லஞ்ச ஒழிப்புத்துறை ரேடாரில் சிக்கிய ஆர்.டி.ஓ!

ஆர்.டி.ஓ வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம்

ஆர்.டி.ஓ ஜெய்சங்கர் வீட்டில் கிட்டத்தட்ட 18 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

`இரண்டு ரகசிய லாக்கர்கள்... 10 வங்கிகளில் கணக்கு' - லஞ்ச ஒழிப்புத்துறை ரேடாரில் சிக்கிய ஆர்.டி.ஓ!

ஆர்.டி.ஓ ஜெய்சங்கர் வீட்டில் கிட்டத்தட்ட 18 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

Published:Updated:
ஆர்.டி.ஓ வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம்

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, புதுக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்மீது புகார் எழுந்ததை அடுத்து, தஞ்சாவூரிலுள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில், ரூ 5.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நான்கு கார்கள், 90 பவுன் நகை, இரண்டு லாக்கர் சாவிகள், சொத்துப் பத்திரங்கள் ஆகியவை குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆர்.டி.ஓ ஜெய்சங்கர்
ஆர்.டி.ஓ ஜெய்சங்கர்

புதுக்கோட்டையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலராகப் பணிபுரிபவர் ஜெய்சங்கர். இவருக்குச் சொந்தமான வீடு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ளது. இந்த நிலையில், ஆர்.டி.ஓ ஜெய்சங்கர் வருமானத்துக்கு அதிகமாச்க சொத்து சேர்த்திருப்பதாக லஞ்ச ஒழிப்புதுறை போலீஸாருக்குப் புகார்கள் சென்று கொண்டே இருந்துள்ளன. அதையடுத்து, அவர்மீது வழக்கு பதிவுசெய்த லஞ்ச ஒழிப்பு தடுப்பு போலீஸார் தஞ்சாவூரிலுள்ள அவர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி ராஜு தலைமையில், ஆய்வாளர்கள் சரவணன், பத்மாவதி ஆகியோர்கொண்ட குழுவினர் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை 7:30 மணிக்குத் தொடங்கிய சோதனை, இன்று அதிகாலை 3 மணிக்கு நிறைவடைந்திருக்கிறது.

லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்திய வீடு
லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்திய வீடு

இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் தரப்பில் விசாரித்தோம். ``ஜெய்சங்கர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து சோதனை மேற்கொண்டோம். கிட்டத்தட்ட 18 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியிருக்கின்றன. வீட்டில் அவருக்குச் சொந்தமான நான்கு கார்கள் இருந்தன. அவை குறித்த விவரங்களைச் சேகரித்திருக்கிறோம். மேலும் ரூ.5.5 லட்சம் பறிமுதல் செய்திருக்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வீட்டுக்குள் இரண்டு ரகசிய லாக்கர்கள் இருந்தன. அவற்றைக் கண்டுபிடித்ததுடன், அவற்றுக்குரிய சாவிகளையும் கைப்பற்றியிருக்கிறோம். வீடு பிரமாண்டமான முறையில் அனைத்து அறைகளும் ஏ.சி வசதியுடன்கூடியதாக அமைக்கப்பட்டிருந்தது. ஃபர்னிச்சருக்கு மட்டுமே பல லட்சங்கள் செலவு செய்துள்ளனர். ஜெய்சங்கரின் மனைவி சுமார் 40 பவுன் அளவுக்கு நகை அணிந்திருந்தார். அது மட்டுமல்லாமல் மேலும் 90 பவுன் அளவுக்கு நகைகள் வைத்திருந்தனர். வைரத்தாலான தோடு உள்ளிட்ட நகைகளும் இருந்தன.

நகை
நகை

ஜெய்சங்கர் தன் மனைவி பெயரில் ஏராளமான சொத்துகள் வாங்கியிருக்கிறார். சொத்துக்குரிய பத்திரங்கள் மற்றும் டாக்குமென்ட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு காப்பீட்டு பிரீமியம் மட்டுமே ரூ 8 லட்சம் செலுத்தும் வகையில், ஆறு எல்.ஐ.சி பாலிசி எடுத்துள்ளனர். ஜெய்சங்கர் தன் மகள் பெயரில் தஞ்சாவூரில் பெட்ரோல் பங்க் ஒன்றும் நடத்திவருகிறார். திருச்சி வயலூரில் ஃபார்ம் ஹவுஸ் இருப்பதாகவும் தெரிகிறது. ஏராளமான தங்க நகைக்கான பத்திரம், நிலப்பத்திரம் போன்றவையும் இருந்தன.

சுமதி பெயரில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் உள்ளன. அதில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதையும் உரிய அனுமதியுடன் விசாரிக்கவிருக்கிறோம். மேலும், ஆர்.டி.ஓ ஆபீஸில் போட்டோ எடுக்கக்கூடிய ஒருவரை தன் வீட்டிலேயே தங்கவைத்துள்ளார். அது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஜெய்சங்கர் எங்கள் கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் பொம்மைபோலவே இருந்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை
லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை

அவருடைய மனைவி சுமதி அனைத்துச் சொத்துகளையும் நிர்வகித்துவந்திருக்கிறார். எவ்வளவு சொத்துகள் இருக்கிற்ன என்பதே தெரியாத அளவுக்கு ஆர்.டி.ஓ ஜெய்சங்கருக்குச் சொத்துகள் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்துள்ளோம். வங்கிக் கணக்கில் உள்ள பணம், சொத்து மதிப்பின் விவரம் போன்ற அனைத்தையும் கணக்கிட்ட பிறகே, வருமானத்துக்கு அதிகமாக எவ்வளவு சொத்துச் சேர்த்திருக்கிறார் என்பது தெரியவரும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism