Published:Updated:

திருவாரூர்: அதிகரித்த லஞ்சப் புகார்! - ஆர்.டி.ஓ அலுவலகத்துக்குக் குறிவைத்த லஞ்ச ஒழிப்புத்துறை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

ஆறு மணி நேரம் நடைபெற்ற அதிரடி சோதனையில் சில முக்கிய ஆவணங்களும், கணக்கில் வராத 25,000 ரூபாய் பணமும் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவாரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சில முக்கிய ஆவணங்களும், கணக்கில் வராத பல ஆயிரம் ரூபாய் பணமும் சிக்கியுள்ளன. இது தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர், ஊழியர்கள் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டுவருகிறது. ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, லைசன்ஸ் புதுப்பித்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்காக இங்கு வரும் பொதுமக்களிடம், வட்டாரப் போக்குவரத்து ஊழியர்கள் அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக, சமீபகாலமாகப் புகார்கள் அதிகரித்துவருகின்றன. அதோடு, புரோக்கர்களின் நடமாட்டமும் பரவலாகக் காணப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

வட்டாரப் போக்குவரத்து  அலுவலகம்
வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

திருவாரூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நந்தகுமார் தலைமையில் ஆய்வாளர்கள் தமிழ்செல்வி, சித்ரா உள்ளிட்டோர் அடங்கிய டீம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். இங்கு பணியாற்றும் ஊழியர்கள் வெளியில் செல்லாமல் இருக்கவும், வெளிநபர்கள் உள்ளே வராமல் தடுக்கவும் இங்கிருந்த கதவுகள் அனைத்தும் பூட்டப்பட்டன. ஆறு மணி நேரம் நடைபெற்ற அதிரடி சோதனையில் சில முக்கிய ஆவணங்களும், கணக்கில் வராத 25,0000 ரூபாய் பணமும் சிக்கின. லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், கணக்கில் வராத பணம் குறித்தும், சில முக்கிய ஆவணங்கள் குறித்தும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அழகர்சாமி, அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் துருவித் துருவி விசாரணை மேற்கொண்டனர்.

கே.சி.வீரமணி: `ரூ.34 லட்சம் பணம்; 4.9 கிலோ தங்கம்; 9 சொகுசு கார்கள் பறிமுதல்!’ - லஞ்ச ஒழிப்புத்துறை

மேலும், இங்கு அடிக்கடி வந்து செல்லும் டிரைவிங் ஸ்கூல் உரிமையாளர்கள், புரோக்கர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் அதிரடி சோதனையை கொஞ்சமும் எதிர்பாராத, திருவாரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள். விசாரணை தற்போது முடிவடைந்தாலும்கூட இங்கு லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரகசியக் கண்காணிப்பில் ஈடுபடக்கூடும் என இவர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு