Published:Updated:

கோவை ஆவின் அலுவலகத்தில் திடீர் ரெய்டு - அதிரடித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்

கோவை ஆவின் அலுவலகம்

கோவை ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு நடத்தினர்.

கோவை ஆவின் அலுவலகத்தில் திடீர் ரெய்டு - அதிரடித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்

கோவை ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரெய்டு நடத்தினர்.

Published:Updated:
கோவை ஆவின் அலுவலகம்

கோவை பச்சாபாளையம் பகுதியில், ஆவின் நிறுவனத்தின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் அலுவலகம் உள்ளது. அங்கு ஒப்பந்த ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக நியமனம் செய்வது, சம்பள நிலுவைத் தொகை போன்ற பல்வேறு விவகாரங்களில் லஞ்சம் வாங்கப்படுவதாகப் புகார் எழுந்தது.

கிருஷ்ணமூர்த்தி
கிருஷ்ணமூர்த்தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முக்கியமாக ஆவின் தொழிலக மூத்த உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி மீது ஏராளமான புகார்கள் எழுந்தன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்று அங்கு திடீரென்று சோதனை நடத்தினர். பொதுமேலாளர் அறை, கிருஷ்ணமூர்த்தியின் அறை, கார் என்று பல்வேறு இடங்களில் அதிரடியாகச் சோதனை நடத்தினர்.

கோவை ஆவின் அலுவலகம்
கோவை ஆவின் அலுவலகம்

நள்ளிரவு வரை தொடர்ந்த இந்தச் சோதனையில் ரூ.8,40,000 பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.5,90,000 கிருஷ்ணமூர்த்தியின் காரிலிருந்தும், ரூ.2,50,000 அவரின் கப்போர்டிலிருந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஊழியர்களின் நிலுவைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்துக் கொண்ட கிருஷ்ணமூர்த்தி, அங்கு வானளாவிய அதிகாரத்துடன் வலம் வந்ததாக ஊழியர்கள் புகார் கூறுகின்றனர். ஊழியர்களிடம் வெற்று காசோலை வாங்குவது,

பணம்
பணம்
கோப்புப் படம்

தனக்கு கட்டுப்படாவிடின் அவர்களை மாற்றம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஆவின் ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism