Published:Updated:

`வாரிசு’ டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கியதாக மக்கள் இயக்க நிர்வாகி கார் உடைப்பு - ரசிகர்கள்மீது வழக்கு

உடைக்கப்பட்ட கார்

ராமநாதபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவரான ஜெயபாலன், `வாரிசு’ திரைப்படத்தின் முதல் மூன்று காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தையும் மொத்தமாக வாங்கியதாகக் கூறப்படுகிறது.

`வாரிசு’, `துணிவு’ திரைப்படங்கள் நாளை மறுநாள் (11-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகின்றன. இரண்டு படங்களுக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் திரையரங்குகள் வாயிலாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.

ராமநாதபுரத்தில் மொத்தம் மூன்று திரையரங்குகள் மட்டுமே இருக்கின்றன. `வாரிசு’, `துணிவு’ என இரண்டு திரைப்படங்களும் மூன்று திரையரங்குகளில் தினசரி காலை, மாலை என மூன்று காட்சிகளாகப் பிரித்து திரையிடத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் பறக்கும்படை தனி வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்துவரும் ஜெயபாலன் என்பவர்தான், ராமநாதபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவராகவும் இருந்துவருகிறார்.

`வாரிசு’ டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கியதாக மக்கள் இயக்க நிர்வாகி கார் உடைப்பு - ரசிகர்கள்மீது வழக்கு

இவர் `வாரிசு’ திரைப்படத்தின் முதல் மூன்று காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தையும் மொத்தமாக வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்றிரவு பத்துக்கும் மேற்பட்டோர் ஜெயபாலன் வீட்டுக்கு வந்து வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது காரை அடித்து நொறுக்கி, கவிழ்த்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில், விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் செந்தில், விக்கி, மதன் உள்ளிட்ட எட்டுப் பேர்மீது ஜெயபாலன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர்.

`வாரிசு’ படத்தின் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தையும் ஜெயபாலன் வாங்கியதால், தங்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் அவரது கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கேணிக்கரை காவல் நிலையம்
கேணிக்கரை காவல் நிலையம்

இதையடுத்து, தலைமறைவாக இருப்பவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

இந்த நிலையில், நாளை மறுநாள் `வாரிசு’ திரைப்படம் வெளியாகும்போது திரையரங்கம் முன்பு விஜய் ரசிகர்கள் இரு தரப்பாக மோதிக்கொள்ளும் சூழல் உருவாகியிருப்பதால், பாதுகாப்பை அதிகப்படுத்த முடிவுசெய்திருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.