Published:Updated:

உ.பி: மாதம் ரூ.1 கோடி; எளிய வாழ்க்கை; டீடோட்டலர்! - தூபே வழக்கில் குழம்பும் அதிகாரிகள்?

விகாஸ் துபே
விகாஸ் துபே

தூபேக்கு நெருங்கிய நண்பர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பட்டியல் ஒன்றை அதிகாரிகள் தயார் செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விகாஸ் தூபே. அம்மாநிலத்தில் மிகவும் பிரபலமான ரவுடியாக வலம் வந்த தூபேவை காவலர்கள் கைது செய்ய முயன்றபோது, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்தத் தாக்குதலில் சுமார் 8 காவலர்கள் உயிரிழந்தனர். பின்னர், தலைமறைவாக இருந்த தூபேவைப் பிடிக்க சுமார் 25 தனிப்படைகள் இரவும் பகலுமாகத் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். எனினும், தூபேவைப் பிடிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வந்தனர்.

இதனையடுத்து, மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி மகா காளி கோயிலில் வைத்து காவலர்கள் அவரைக் கைது செய்தனர். அப்பகுதி கடைக்காரர் ஒருவர் அளித்த தகவலின்படி காவலர்கள் தூபே இருக்கும் இடத்தைக் கண்டறிந்தனர். தூபே மீது கொலை, கொள்ளை, மிரட்டல் என 60-க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன. ஆரம்பகாலத்தில் அவர் பிரபல கட்சி ஒன்றில் உறுப்பினராக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரவுடி விகாஸ் தூபே கைது
ரவுடி விகாஸ் தூபே கைது

உஜ்ஜைனில் இருந்து கான்பூருக்கு மூன்று போலீஸ் வாகனங்களின் பாதுகாப்புடன் தூபேவை அழைத்து வரும் வழியில் அவர் தப்பிக்க முயன்றதாகக் கூறி காவலர்கள் என்கவுன்டர் செய்தனர்.

``தூபேவை கைது செய்து உத்தரபிரதேசத்துக்கு அழைத்து வரும் வழியில் அதிக மழை பெய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ரவுடி இருந்த வாகனம் சாலையில் வழுக்கி விபத்துக்குள்ளானது. அந்தச் சமயத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட தூபே உடனடியாக அருகிலிருந்த காவலரின் துப்பாக்கியைப் பிடுங்கி சுட்டுள்ளார். தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக தூபே மீது காவலர்கள் என்கவுன்டர் செய்துள்ளனர்” என்று கான்பூர் காவலர்கள் சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ளனர்.

உ.பி: `சாலை விபத்து ; தப்ப முயற்சி’ - ரவுடி விகாஸ் தூபே என்கவுன்டரில் சுட்டுக் கொலை

காவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதன் வாயிலாக அவரது பெயர் இந்தியா முழுவதும் பிரபலமானது என்றே கூறலாம். விகாஸ் தூபே மாதம் சுமார் ரூபாய் 1 கோடி வரை சம்பாதித்து வந்துள்ளார் என அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மிகவும் எளிமையான வாழ்க்கையையே தூபே வாழ்ந்து வந்ததாகவும் அவர் டீடோட்டலராக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆடம்பரமான வாழ்க்கைக்கு தூபே எப்போதும் ஆசைப்பட்டதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், தூபே பதுக்கி வைத்துள்ள பணத்தைக் கண்டுபிடிப்பது அதிகாரிகளுக்கு மிகவும் கடினமான வேலையாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. அவரது வங்கிக் கணக்கிலும் மிகப்பெரிய அளவில் தொகை எதுவும் இல்லை என்றே தெரிவிக்கின்றனர்.

ரவுடி விகாஸ் தூபே கைது
ரவுடி விகாஸ் தூபே கைது

அதிகாரிகள் தற்போது தூபேயின் நெருங்கிய நண்பர்களின் வங்கிக் கணக்குகள், அவர்களது கணக்கில் நடந்த பரிவர்த்தனைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தூபே மாதத்துக்கு 90 லட்சம் முதல் 1.20 கோடி வரை சம்பாதித்து வந்துள்ளார் என அதிகாரிகளின் வட்டம் தெரிவித்துள்ளது. ஆனால், அவர் வெளிநாடுகளுக்குப் பயணங்கள் செல்லவோ, விலையுயர்ந்த பொருள்களை வாங்கவோ இல்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், அவர் சம்பாதித்த பணத்தை எதற்காக, எப்படிச் செலவு செய்துள்ளார் என்ற கேள்வி அதிகாரிகளிடம் எழுந்துள்ளது. இதையடுத்து, தூபேயின் நிதிகளை அமைதியாக நிர்வாகம் செய்து வரும் நபர்களையும் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, தூபேவுக்கு நெருங்கிய நண்பர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பட்டியல் ஒன்றை அதிகாரிகள் தயார் செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளது எனலாம்.

Credits : Hindustantimes

விகாஸ் துபே வியாபித்த உத்தரப் பிரதேசம்… யோகி ராஜ்ஜியமா, கேங்ஸ்டர் ராஜ்ஜியமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு