Published:Updated:

அதிர்வுகளும் பின்னணியும்: `டுமீல் டூமில்' தி.மு.க எம்.எல்.ஏ., விகாஸ் துபேயின் ரத்த சரித்திரம்!

தி.மு.க எம்.எல்.ஏ., விகாஸ் துபேயி
தி.மு.க எம்.எல்.ஏ., விகாஸ் துபேயி

தொழிலில் யார் பெரியவன் என்பதைக் காட்டவே இந்த மோதல் தொடங்கி, அது துப்பாக்கிச்சூடு வரை சென்றிருக்கிறது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே செங்காடு பகுதியில் நிலத்தகராறு தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக திருப்போரூர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ-வான இதயவர்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக ரியல் எஸ்டேட் தொழிலில் கோலோச்சிவரும் இரு வேறு அரசியல்-அதிகாரப் புள்ளிகளின் தொழில் போட்டியே மேற்கண்ட மோதலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

தி.மு.க எம்.எல்.ஏ-வான இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி திருப்போரூர் அருகேயுள்ள செங்காடு கிராமத்தில் வசித்துவருகிறார். இதே பகுதியில் வசித்துவரும் ரியல் எஸ்டேட் அதிபர் 'இமயம்' குமாரின் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ-வின் குடும்பத்தினருக்கும் நீண்டகாலமாக முன் விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

திரூப்போரூர்
திரூப்போரூர்

இந்த மோதலின் உள் விவகாரங்கள் அறிந்த சிலரிடம் பேசியபோது, "அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு கொண்ட இரு பெரும் புள்ளிகளின் தொழில் பகை நீண்டகாலமாக இந்தப் பகுதியில் நீடிக்கிறது. கிழக்குக் கடற்கரைச் சாலை முழுவதும் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப்போட்டுள்ளனர்.

இந்தத் தொழிலில் யார் பெரியவன் என்பதைக் காட்டவே இந்த மோதல் தொடங்கி, அது துப்பாக்கிச்சூடு வரை சென்றிருக்கிறது. இது இந்த ஒரு சம்பவத்துடன் நிற்காது; சிலபல கொலைகள் வரை செல்லும் அபாயம் இருக்கிறது. இதை முன்கூட்டியே காவல்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார்கள்.

- இது தொடர்பான விரிவான கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க.. > அரசியல் அதிகாரம்... ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம்... தொடரும் தொழில் போட்டி - டுமீல் டூமில்... திகிலில் திரூப்போரூர் மக்கள்! https://bit.ly/3fxsWeb

* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.

அரசியல் அதிகாரம்... ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம்... தொடரும் தொழில் போட்டி

விகாஸ் துபேயின் ரத்த சரித்திரம்!

போலீஸ்-கேங்ஸ்டர் மோதலால் கலவர பூமியாகியிருக்கிறது, உத்தரப்பிரதேசம்! கான்பூரில் எட்டு போலீஸாரைச் சுட்டுக் கொன்ற விகாஸ் துபே என்ற ரௌடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். விகாஸின் கூட்டாளிகள் சிலரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டுள்ளனர். சினிமாவை மிஞ்சும் காட்சிகள் அரங்கேறியிருக் கின்றன உத்தரப்பிரதேசத்தில்.

யார் இந்த விகாஸ் துபே?

உ.பி மாநிலம், கான்பூர் மாவட்டத்திலுள்ள பிக்ரூ என்ற கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்தான் விகாஸ் துபே. உத்தரப்பிரதேசத்துக்கு ஆன்மிக அடையாளம் இருக்கும் அதே அளவுக்கு தாதாயிச அடையாளமும் உண்டு. ஆரம்பத்தில் விகாஸ் துபேயும் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என்று வலம்வந்தவர்தான்.

காவல்துறையினரும் அரசியல்வாதிகளும் அவரது குற்றங்களுக்கு துணைபோனார்கள். பா.ஜ.க., சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் என உ.பி-யின் அனைத்து முக்கியக் கட்சிகளிலும் விகாஸ் இருந்துள்ளார். இதன் மூலம் பஞ்சாயத்துத் தலைவர், மாவட்ட பஞ்சாயத்துக்குழு உறுப்பினர் ஆகிய பதவிகள் விகாஸைத் தேடி வந்துள்ளன. விகாஸின் மனைவி மற்றும் சகோதரர்களும் அரசியலில் குதித்து, பதவிகளை அடைந்தனர்.

சாதாரண ரௌடியாக இருந்த விகாஸ் துபே, கேங்ஸ்டரானார். கான்பூரில் கிட்டத்தட்ட 80 கிராமங்களைத் தன் கன்ட்ரோலுக்குக் கொண்டு வந்தார். எப்போதும் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களையே தன் டீமில் சேர்த்துக்கொள்வார்.

விகாஸ் துபே
விகாஸ் துபே

''இப்போதைய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 2001-ம் ஆண்டு உத்தரப்பிரதேச முதல்வராக இருந்தார். அப்போது, மாநில இணை அமைச்சராக இருந்த சந்தோஷ் சுக்லாவை, ஷிவ்லி என்ற காவல்நிலையத்தில் வைத்தே சுட்டுக் கொன்றார் விகாஸ். 30-க்கும் மேற்பட்ட போலீஸார் அதை நேரில் பார்த்துள்ளனர். அப்படியிருந்தும் ஒருவர்கூட சாட்சி சொல்லவில்லை. அதனால், விகாஸ்மீது எந்த நடவடிக்கையும் இல்லை'' என்று அதிர்ச்சி விலகாமல் சொல்கின்றனர் பாதிக்கப்பட்ட தரப்பினர்.

''30 ஆண்டுகளில் ஐந்து கொலைகள் உட்பட 62 வழக்குகள் விகாஸ் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவையெல்லாம் வெறும் கண்துடைப்பு மட்டுமே. பள்ளி ஆசிரியர் தொடங்கி அரசியல்வாதி வரை விகாஸ் கொலை செய்திருந்தாலும், காவல்துறைக்கும் அவருக்கும் நல்ல உறவு இருந்துவந்தது'' என்கின்றனர் விவரமறிந்த வட்டாரத்தினர்.

- இதுதொடர்பான விரிவான கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் வாசிக்க க்ளிக் செய்க.. > 30 ஆண்டுகள்... 5 கொலைகள்... 62 வழக்குகள்... 60,000 கோடி ரூபாய் சொத்து... விகாஸ் துபேயின் ரத்த சரித்திரம்! https://bit.ly/392063d

* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.

30 ஆண்டுகள்... 5 கொலைகள்... 62 வழக்குகள்... 60,000 கோடி ரூபாய் சொத்து...

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு