Published:Updated:

லஞ்சம்: `வாரிசுச் சான்றிதழுக்கு ரூ.2,000; பட்டா மாற்ற ரூ.20,000’ - அடுத்தடுத்து சிக்கிய வி.ஏ.ஓ-க்கள்

கைதுசெய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட வி.ஏ.ஓ
கைதுசெய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட வி.ஏ.ஓ

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் வி.ஏ.ஓ ஒருவர் வாரிசுச் சான்றிதழ் தருவதற்கு லஞ்சம் பெற்றதாக வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு வி.ஏ.ஓ லஞ்சம் பெற்றதற்காக லஞ்ச ஒழிப்புத்துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வாரிசுச் சான்றிதழ் தருவதற்கு விழுப்புரம் மாவட்டம், நவமால் காப்பேர் கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சப்ராபீபி 2,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஓய்வதற்குள் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருந்த ராஜி (59) என்ற நபர், பட்டா மாறுதல் செய்வதற்காக 20,000 ரூபாய் லஞ்சம் பெற்றதால், லஞ்ச ஒழிப்புத்துறையால் கைதுசெய்யப்படுள்ளார். இன்னும் ஆறு மாதங்களில் பணி ஓய்வுபெறும் நிலையில் இருந்திருக்கிறார் இந்த அதிகாரி.

தைலாபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்
தைலாபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்

வி.ஏ.ஓ லஞ்சம் பெற்ற இந்தச் சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, அடுத்தடுத்து கிராம நிர்வாக அலுவலர்கள் லஞ்சம் பெற்று சிக்கியுள்ள சம்பவம் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.

விழுப்புரம்: வாரிசுச் சான்றிதழுக்கு ரூ.2,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ! -  வைரலான வீடியோ மூலம் விசாரணை

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ``தைலாபுரத்தைச் சேர்ந்தவர் உத்ரகுமார் (30). இவரின் தந்தை ஏழுமலை பெயரிலும், அண்ணன் முருகன் என்பவரின் பெயரிலும் பல வருடங்களுக்கு முன்பு நான்கு ஏக்கர் நிலம் வாங்கியுள்ளனர். ஏழுமலை படிக்காதவர் என்பதால், பட்டா பெயர் மாற்றம் செய்யாமல் இருந்துவந்துள்ளனர். இந்தநிலையில், பட்டா மாற்றம் செய்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்திருக்கிறார் உத்ரகுமார்

கிராமம் என்பதால் வி.ஏ.ஓ கவனத்துக்கு அது வந்துள்ளது. அதனால், வி.ஏ.ஓ ராஜியை அணுகியிருக்கின்றனர். பட்டா மாற்ற ஒரு பெயருக்கு 10,000 ரூபாய் வீதம் 20,000 ரூபாய் தர வேண்டும் என கேட்டிருக்கிறார்ர் வி.ஏ.ஓ ராஜி. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நபர், எங்கள் துறையை அணுகினார். எங்கள் துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய நோட்டுகள் 20,000 ரூபாயைக் கொடுத்து அனுப்பினோம். உத்திரகுமார் தைலாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கே நேரில் சென்று பட்டா மாறுதல் பற்றிக் கேட்டிருக்கிறார். `கேட்ட காசு எங்கே?’ என வி.ஏ.ஓ கேட்க, ரசாயனம் தடவிய 20,000 ரூபாயைக் கொடுத்திருக்கிறார் உத்திரகுமார். அதைப் பெற்றதும் தன் பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டிருக்கிறார்.

கைதுசெய்யப்பட்ட வி.ஏ.ஓ ராஜி
கைதுசெய்யப்பட்ட வி.ஏ.ஓ ராஜி

அடுத்ததாக, நாங்கள் சென்று விசாரித்தபோது உண்மையை ஒப்புக்கொண்டார். லஞ்சமாகப் பெற்ற தொகையைச் சோதித்து பார்த்த போது உறுதியானது. அதைத் தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் காண்பித்து கைதுசெய்திருக்கிறோம்" என்றனர்.

ஒரு சிப்பம் நெல் மூட்டைக்கு ரூ.50! -  ரூ.32,800 லஞ்சமாக கேட்ட அதிகாரியை சிக்க வைத்த விவசாயிகள்!

விழுப்புரம் மாவட்டத்தில், வி.ஏ.ஓ இருவர் அடுத்தடுத்து லஞ்சம் பெற்று சர்ச்சையில் சிக்கியுள்ள சம்பவம் மாவட்டத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு