Published:Updated:

``அந்த 8 பேருக்கும் தண்டனை கொடுக்கணும்..." - வீடியோ வெளியிட்டு, தற்கொலை செய்துகொண்ட கிராம உதவியாளர்!

திருச்சுழி காவல் நிலையம்
News
திருச்சுழி காவல் நிலையம்

விருதுநகரில் குடும்பப் பிரச்னையால் தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக வீடியோவில் பேசி, அதை வாட்ஸ்அப்பில் வெளியிட்ட கிராம உதவியாளர், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழியை அடுத்த பள்ளிமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகசுந்தரம். இவர், திருச்சுழி தாலுகாவுக்குட்பட்ட முத்தனேரி கிராம நிர்வாக அலுவலகத்தில், கிராம அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்துவந்தார். இவர், கடந்த 31-ம் தேதி குடும்பத் தகராறு காரணமாக தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகக் கூறி, வீடியோவில் பதிவுசெய்து, அதை வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் அனுப்பியிருக்கிறார்.

தற்கொலை செய்துகொண்ட விநாயகசுந்தரம்
தற்கொலை செய்துகொண்ட விநாயகசுந்தரம்

இந்த நிலையில், நேற்று அவரது வீட்டில் தூக்கு மாட்டி, தற்கொலை செய்துகொண்டார். போலீஸாரிடம் தகவல் தெரிவிக்காமல் உறவினர்கள் அவர் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய முயன்றனர். அந்தத் தகவலறிந்து வந்த திருச்சுழி காவல் நிலைய போலீஸார், விநாயகசுந்தரத்தின் உடலை மீட்டு திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தொடர்ந்து விநாயசுந்தரம் தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார்கள். விநாயகசுந்தரம் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக வெளியிட்டிருந்த வீடியோவில், ``மாவட்ட ஆட்சியரய்யா... வணக்கமய்யா. தலையாரியா வேலை பார்த்துட்டு வர்றேங்கய்யா... எட்டுப் பேரு சேர்ந்து குடும்பத்துல இருக்குற சொத்துக்காக எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வரவெச்சு பிரிச்சுட்டாங்க. உஷாராணி, சுப்புலெட்சுமி, மொட்டையம்மாள், மீனாட்சி, பானு, முனீஸ்வரி, பந்தானா, நாகம்மாள் இவங்க எட்டுப் பேரும்தான் அதுக்குக் காரணம். நான் சாகுற நிலைமைக்கு வந்துட்டேன். இவங்க மேல நடவடிக்கை எடுக்கணும்” என உருக்கமாக அந்த அவர் பேசியிருந்தார். அவரின் தற்கொலை தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தோம். ``விநாயக சுந்தரத்துக்கும் இன்னொரு பொண்ணுக்கும் தொடர்பு இருந்ததாச் சொல்றாங்க. இந்த விஷயம் அவரோட மனைவிக்குத் தெரிஞ்சுபோச்சு. அதை மனைவிகிட்ட சொல்லிக் கொடுத்ததா நினைச்சு மனைவியோட தோழிகளான எட்டுப் பேர் பெயர்களை வீடியோவுல சொல்லி தண்டனை கொடுக்கச் சொல்லிப் பேசியிருக்கார்.

திருச்சுழி அரசு மருத்துவமனை
திருச்சுழி அரசு மருத்துவமனை

அந்த பிரச்னைக்குப் பிறகு, விநாயகசுந்தரத்தைவிட்டு அவரோட மனைவி பிரிஞ்சு போயிட்டாங்க. அந்த விரக்தியில விஷம் குடிச்சு சாகப்போறதா ஏற்கெனவே சில நாள்களுக்கு முன்னால சொல்லிக்கிட்டு இருந்தாரு. அதே மாதிரி சாகப்போறதா வீடியோவுல பேசி மனைவி, நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பியிருக்காரு. ஆனா, அவர் வீடியோவுல பேசுனதை யாரும் பெருசா எடுத்துக்கலைன்னு பேசிக்கிறாங்க.

இந்த நிலையிலதான், வீடியோ வெளியிட்ட ரெண்டு நாள் கழிச்சு தூக்குமாட்டி இறந்துட்டாரு" என்றனர்.